ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றம்

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும். அந்த வகையில் சித்திரை தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி இன்று அதிகாலை 3:30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அதிகாலை 3:45 மணிக்கு கொடியேற்ற மண்டபம் வந்தார். பின்னர் காலை 5:30 மணி முதல் காலை 6:15 மணிக்குள் மேஷ லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து 7:30 மணிக்கு நம்பெருமாள் கொடி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 7:45 மணிக்கு அறையை சென்றடைந்தார். மாலை 4:30 மணிமுதல் 5:30 மணிவரை பேரிதாடனம் நடைபெறுகிறது. பின்னர் மாலை 6:30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகள் உலா வந்து இரவு 8:30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை சென்றடைகிறார். அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.

விழாவின் இரண்டாம் நாளான நாளை (29-ந்தேதி) மாலை கற்பசுவிருஷ வாகனத்திலும், 30-ந்தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலையாளி வாகனத்திலும், 1-ந்தேதி காலை இரட்டைபிரபை வாகனத்திலும், மாலை கருடவாகனத்திலும், 2-ந்தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 3-ந்தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமான் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார்.4-ந்தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 5-ந்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. 7-ந்தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. 8-ந்தேதி ஆளும்பல்லக்குடன் சித்திரை தேர் திருவிழா நிறைவடைகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision