கொரோனா நிவராண பொருட்களை வழங்கிய ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி
கொரோனா தொற்று 2 அலை காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஏழை எளிய மக்கள் வேலையின்றி தவித்து வந்தனர். இவர்களுக்கு உதவிடும் வகையில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் உதவிகளை செய்து வருகின்றனர். இதுமட்டுமின்றி அரசியல் கட்சியினர் உணவு பொருட்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக அரிசி, சமையல் எண்ணெய், துவரம் பருப்பு, டீ தூள், பிஸ்கட் பாக்கெட், முககவசம், கிருமி நாசினி ஆகியவை உள்ளடக்கிய தொகுப்பை 300 குடும்பங்களுக்கு வழங்குவதற்கு மத்தூர் சேர்மன் அ.கருப்பையா ஏற்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து மாத்தூர் மற்றும் சன்னாசிப்பட்டி பகுதிகளில் கொரோனா நிவாரண பொருட்களை ஶ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியை திமுக ஒன்றிய செயலாளார் மாத்தூர் அ.கருப்பையா தலைமை தாங்கினார். மணிகண்டம் ஒன்றிய பெருந்தலைவர் கமலம் கருப்பையா, ஊராட்சி மன்ற தலைவர்கள் நாகமங்கலம் வெள்ளைச்சாமி அம்மாபேட்டை காந்தி என்கிற அழகப்பன், அளுந்தூர் ஆரோக்கிய சாமி, சேதுராப்பட்டி தங்கரத்தினம், மாத்தூர் பாரதி,மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve