மதவெறியை,இனபிரிவினையை தூண்டி ஆட்சிக்கு வர துடிப்பவர்களை வீழ்த்த வேண்டும் - ஸ்ரீரங்கம் பரப்புரையில் ஸ்டாலின் பேச்சு

மதவெறியை,இனபிரிவினையை தூண்டி ஆட்சிக்கு வர துடிப்பவர்களை வீழ்த்த வேண்டும் - ஸ்ரீரங்கம் பரப்புரையில் ஸ்டாலின் பேச்சு
திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.வேட்பாளர்களுக்கு வாக்குகளை கேட்டார்.

தேர்தலுக்காக மட்டும் உங்களை சந்திப்பவன் ஸ்டாலின் அல்ல,எந்த சூழலிலும் உங்களை சந்திப்பவன் தான் நான்.ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிற கொள்கையின் அடிப்படையில் உறுதியாக இருந்து அனைத்து மக்களுக்குமாக உழைப்பவர்கள் நாங்கள்.
தி.மு.க வினர் எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல  என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
பா.ஜ.க வும் அ.தி.மு.கவும் தி.மு.க வை விமர்சித்து தான் பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்களின் ஆட்சியில் என்ன செய்தோம் என்பதை அவர்கள் கூறுவதில்லை அதற்கு காரணம் அவர்கள் எதுவும் செய்யவில்லை என்பது தான்.

அ.தி.மு.க அரசு தங்களின் ஆட்சியை காப்பாற்றி கொள்ளவே நான்கு ஆண்டுகளை செலவழித்துள்ளார்கள்.இன்றும் அ.தி.மு.க வில் கோஷ்டி சண்டை நிலவி வருகிறது.
பழனிச்சாமியின் முதலமைச்சர் பதவி மீது பன்னீர் செல்வத்திற்கும் பன்னீர் செல்வத்தின் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பதவி மீது பழனிச்சாமிக்கும் ஆசை இருக்கிறது.

ஜெயலலிதா கொடுத்து விட்டு சென்ற அதிகாரத்தை வைத்து இவர்கள் எதுவும் செய்யவில்லை மாறாக அந்த அதிகாரத்தை காப்பாற்றி கொள்ள மத்திய அரசுக்கு அடிமையாக இருந்து தமிழ்நாட்டின் உரிமைகளை பறி கொடுத்துள்ளார்கள்.
மூன்று வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது,விவசாயத்திற்கு தனி பட்ஜெட்,மகளிருக்கு பல நல திட்டங்கள்
திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்,ஸ்ரீரங்கம் பேருந்து நிலையத்தை மேம்படுத்துவது,பக்தர்கள் தங்குமிடம் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும்,நவல்பட்டு தகவல் தொழில்நுட்ப பூங்காவில் கூடுதல் நிறுவனங்கள் தொடங்க நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளோம்.

பதவி பிரமாணம் எடுத்துக்கொண்ட மேடையிலையே விவசாயிகளின் கடன்களை ரத்து செய்தவர் கருணாநிதி.அவர் வழியில் நின்று நானும் விவசாயிகள் வாங்கிய கடன்கள் தி.மு.க ஆட்சிக்கு வந்த உடன் ரத்து செய்யப்படும் என அறிவித்தேன்.
ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் செய்றான் என ரஜினிகாந்த் திரைப்படத்தில் சொல்வார் அதே போல ஸ்டாலின் சொல்வான் எடப்பாடி பழனிச்சாமி செய்வார் என நான் அறிவிக்கும் திட்டங்களை அவர் செயல்படுத்தினார்.
 
கூட்டமாக இருக்கும் இடங்களில் முக கவசம் அணிய வேண்டும்.
 வேட்பாளர்களும் அணியவில்லை நானும் தற்போது தான் அணிய வில்லை என பேசினார். தனி மனித இடைவெளி பின்பற்றுகிறேன்.அனைவரும் முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். அனைவரும் தடுப்பூசி  போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய வேண்டும்.
கொரோனா தமிழகத்தில் பரவும் என நான் சட்டமன்றத்தில் கூறிய போது அம்மா ஆட்சியில் கொரோனா வராது என பழனிச்சாமி கூறினார்.
ஸ்டாலினின் ஏழு உறுதிமொழிகளை அண்ணா,கலைஞர் மீது உறுதியிட்டு கூறுகிறேன் நான் நிச்சயம் அதை நிறைவேற்றுவேன்.
நான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் வேட்பாளர்.நான் வெற்றிபெற்று முதலமைச்சர் ஆக வேண்டுமென்றால் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.
மதவெறியை ,இன பிரிவினையை தூண்டி ,இந்தியை திணித்து மத வெறி ஆட்சிக்கு வர நினைப்பவர்களை நாம் வீழ்த்த வேண்டும்.
இது திராவிட மண் மோடி மஸ்தான் வேலைகள் இங்கு பலிக்காது.
தி.மு.க வினரை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர்களையும் தான் கலைஞர் உடன்பிறப்பே என அழைப்பார்.எனவே உடன்பிறப்புகள் அனைவரும் தி.மு.க விற்கு வாக்களிக்க வேண்டும்.வரும் தேர்தல் ஆட்சிமாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல நம்முடைய தன்மானம் காப்பாற்ற,சுயமரியாதையை மீட்க,இழந்த உரிமைகளை மீட்பதற்கான தேர்தல் என பேசினார்.

வேட்பாளர்கள்
திருச்சி மேற்கு தொகுதியில் தி.மு.க கே.என்.நேரு
திருச்சி கிழக்கு-இனிகோ இருதயராஜ்
ஸ்ரீரங்கம்-பழனியாண்டி
திருவெறும்பூர்-அன்பில் மகேஷ் பொய்யாமொழி
லால்குடி-செளந்தரப்பாண்டியன்
மண்ணச்சநல்லூர்-கதிரவன்
துறையூர்-ஸ்டாலின் குமார்
மணப்பாறை-அப்துல் சமது(மனித நேய மக்கள் கட்சி-உதயசூரியன் சின்னம்)

ஆகியோருக்கு வாக்கு கேட்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.