சிறந்த செஃப் போட்டியில் பரிசுகளை வென்ற மாநில ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி நிறுவனம்!!
ஓசூர் அருகே உள்ள ஜீமங்கலம் என்ற ஊரில் ஆசியன் கிறிஸ்டியன் குளினரி மற்றும் வேளாண் அறிவியல் நிறுவனம் நடத்திய Budding Chef என்ற போட்டியில் திருச்சியை சேர்ந்த ஸ்டேட் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி நிறுவனம் பல்வேறு பரிசுகளை வென்றுள்ளனர்.
லைவ் குக்கிங் சேலஞ்ச், லைவ் பாஸ்தா சேலஞ்ச், லைவ் மிஸ்ட்ரி பேஸ்கெட் குக்கரி சேலஞ்ச், லைவ் கேக் டெகரேஷன் சேலஞ்ச், புட் போட்டோகிராபி சேலஞ்ச், புட் ரீல்ஸ் சேலஞ்ச் டே என ஆர்வத்தையும் திறமையையும் பரிசோதிக்கும் வகையில் நடத்தப்பட்ட போட்டிகளில் ஸ்டேட் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி மாணவர்கள் ஒரு தங்கப் பதக்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள், பதினோரு வெண்கலப் பதக்கங்கள் என பதினான்கு பதக்கங்களுடன் இரண்டு பாராட்டுச் சான்றிதழ்கள் பெற்றுள்ளனர்.
இது எங்கள் நிறுவன மாணவர்களின் அயராத உழைப்பையும், ஆசிரியர்களின் தொடர் பயிற்சியையும் காட்டும் மற்றுமொரு சிறந்த நேரமாகும் என்று நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision