விவசாயி விளைவித்த பொருளை இடைத்தரகயின்றி விற்பனை செய்ய விரைவில் திருச்சியில் அங்காடி
திருச்சி மாவட்டத்தில் ஆறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய தோட்டக்கலைத் துறை மூலமாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது . திருச்சியில் முசிறி, துறையூர் மண்ணச்சநல்லூர், மணப்பாறை ,வையம்பட்டி, புள்ளம்பாடி ஆகிய ஆறு பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் உழவர் உற்பத்தி குழு ஒவ்வொரு பிளாக்கில் துவங்கப்பட்டுள்ளது.
அதில் தலைவர், செயலாளர் ,பொருளாளர் இருக்கிறார்கள். அவர்களிடம் ஐந்து உழவர் ஆர்வலர் குழு உள்ளது. மொத்தம் 100 பேர் ஒரு பிளாக்கில் உள்ளனர். தற்போது 6 பிளாக்குகளில் 600 பேர் உற்பத்தி குழுவில் இருப்பார்கள். இந்நிலையில் 300 பேரை மட்டும் தேர்வு செய்து முதல் கட்டமாக விவசாயிகள் விளைவித்த பொருட்களை வேளாண் வணிகத்துறை மூலமாக உழவர் சந்தையில் விற்கப்படும் விலையை விட ஒரு ரூபாய் குறைவாக விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
தோட்டக்கலைத் துறை சார்பாக இந்த விற்பனையகம் விரைவில் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது. நாளடைவில் மக்களிடையே உள்ள வரவேற்பு மற்றும் இதன் மூலம் கிடைக்கக்கூடிய வருவாயை வைத்து அடுத்த பகுதிகளிலும் தோட்டக்கலைத்துறை விற்பனையகத்தை துவங்க உள்ளது .தற்பொழுது அறநிலையத்துறை இடத்தில் 2000 சதுர அடியில் 25 ஆயிரம் ரூபாய் வாடகையில் இந்த விற்பனையகம் துவங்க தயாராக உள்ளது. முக்கியமாக இப்பகுதிக்கு தமிழகத்தில் ஊட்டி ,நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதியில் இருந்து விலையும் பொருட்களுக்கான வருவாயை விவசாயிகள் நேரடியாக உழவர் உற்பத்தி குழுக்களில் அதற்கான தொகையை பில் மூலம் பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தோட்டக்கலை துறை துணை இயக்குனர் விமலா தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக விவசாயிகள் போராடி கேட்டு வரும் தாங்கள் விளைவித்த பொருட்களை தாங்களே இடைத்தரகர் இன்றி விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக இருந்தது. அதை விரைவில் அமல்படுத்தபடும் நிலையில் விவசாயிகள் நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள் என்பதில் ஐயமில்லை. 2015 ,16 இல் இருந்து தோட்டக்கலைத்துறை இதுபோன்ற விற்பனை மையத்தை உருவாக்க தொடர்ந்து திட்டங்களை தயாரித்து அதில் உழவர் உற்பத்தி குழுக்கள் மூலம் விவசாயிகளை ஒன்றிணைத்து இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GJDm40VrfQc6PgMBZJzYBf
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn