திருச்சியில் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம்
திருச்சி மாநகரின் முக்கிய பகுதியான NSB ரோடு. தெப்பக்குளம், தேரடி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சியின் சார்பில் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் முழுமையாக மூடாமலும் முழுமையான பணிகள் முடிந்துள்ளது.
ஆனால் புதிய தார் சாலை போடப்படாததால் மண் வாரி இறைப்பதால் தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இது சம்பந்தமாக மாநகராட்சி அதிகாரியிடம் 5 மாதமாக தகவல் சொல்லியும் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. எனவே தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க AITUC தரைக்கடை சங்கத்தின் சார்பில் இன்று (27.7.2023) வியாழக்கிழமை NSB ரோடு பகுதியில் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம் AITUC தரைக்கடை சங்க மாவட்ட செயலாளர் A. அன்சர் தீன் தலைமையில் நடைபெற்றது.
AlTUC மாவட்டத் தலைவர் வே.நடராஜா போராட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார்கள். தரைக்கடை சங்க மாவட்ட தலைவர் எஸ். சிவா மாவட்ட பொருளாளர் எஸ் .சையது அபுதாஹிர் மாவட்ட துணைச் செயலாளர் சொக்கி சண்முகம், துணை தலைவர்இரா சுரேஷ் முத்துசாமி, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநில பொருளாளர் கே. இப்ராஹிம் ஆகியோர் போராட்டத்தை விளக்கி பேசினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நந்தி கோவில் தெரு, என் .எஸ். பி. ரோடு, தெப்பக்குளம், தேரடி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தனரக்கடை வியாபாரிகள் 250 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn