பிரபல பள்ளிக்கு வர ஆசிரியர் அழைத்ததால் மாணவர் தற்கொலை மாணவன் பள்ளியில் கொடுமைப்படுத்தப்பட்டதாக பெற்றோர் கதறல்

பிரபல பள்ளிக்கு வர ஆசிரியர் அழைத்ததால் மாணவர் தற்கொலை மாணவன் பள்ளியில் கொடுமைப்படுத்தப்பட்டதாக பெற்றோர் கதறல்

பள்ளிக்கு வரச்சொல்லி வீட்டிற்கு சென்று அழைத்த ஆசிரியர்- மாணவன் தற்கொலை- பள்ளியில் மாணவனை துன்புறுத்தியதாக பெற்றோர் கதறல்

திருச்சி கே.கே நகர், காஜாமலை காலனி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன், இவர் ஏர்போர்ட் வயர்லெஸ் சாலையில் உள்ளதனியார் உணவு விடுதியில் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மல்லிகா, இனாம்குளத்தூர் பகுதியில் உள்ள உணவு தயாரிக்கும் விடுதியில் பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் இவர்களது மூத்தமகன் துரைசிங்கம் (17), திருச்சி தெப்பக்குளம் பகுதியில் உள்ள நேஷனல் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார், நன்கு படிக்கும் இவர் கடந்த சில நாட்களாக சஞ்சீவி நகரில் உள்ள தனது தாத்தா பெரியசாமி வீட்டிலிருந்து, பள்ளிக்கு சென்றுவந்துள்ளார்.

இந்த நிலையில் சக மாணவர்கள் கிண்டல் செய்ததாலும், அதுகுறித்து ஆசிரியரிடம் தெரிவித்தும் அவர்களை கண்டிக்காததால், கடந்த சிலநாட்களாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்துவந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை இவர் தனது தாய் வசித்துவரும் காஜாமலை காலனி பகுதியில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார், அன்றைய தினம் அவர்களது பள்ளி ஆசிரியர் இருவர் துரைசிங்கத்தை வந்து சந்தித்து பேசிவிட்டுச் சென்றதாகவும், இதனைதொடர்ந்து இவரது தந்தை ராமச்சந்திரன் மகன் துரைசிங்கத்திற்கு அறிவுரைகள் வழங்கி நாளை முதல் பள்ளிக்கு செல்லுமாறு தெரிவித்துவிட்டு தான் மாணவனுடன் பள்ளிக்கு வருவதாகவும்கூறி, இரவு வரும்போது மகனுக்கு உணவு வாங்கி வருவதாகவும் கூறிவிட்டு பணிக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் இவரது தாயாரும் காலை பணிக்கு சென்றுவிட்ட காரணத்தினால், பள்ளியில் ஏற்பட்ட மன வேதனை காரணமாகவும் இரவு துரைசிங்கத்தின் தந்தை ராமச்சந்திரன் பணி முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகன் துரை சிங்கம் வீட்டில் உள்ள படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

 இதனைத் தொடர்ந்து உடனடியாக கேகே நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற கேகே நகர் போலீசார் துரை சிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர், அதனைத் தொடர்ந்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் தமிழ் ஆசிரியர் செல்வம் ஆகியோர் மாணவர் துரை சிங்கத்தை அடிக்கடி திட்டுவதுடன், அதனாலயே மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான நிலையில் காணப்பட்டதாகவும் பெற்றோர்கள் கூறினர்.

ஏற்கனவே பள்ளிக்கு சென்ற பெற்றோரை இருக்கைகூட வழங்காமல் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர், தலைமையாசிரியர் ஆகியோர் அவமதிப்பு செய்ததாகவும், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் தமிழ் ஆசிரியர் ஆகியோர் மிரட்டுதலினால் பள்ளிக்குச்செல்ல பிடிக்காமல் தனது மகன் வீட்டிலேயே முடங்கி இருந்ததுடன் தேர்வு மட்டும் எழுதுகிறேன் பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லை என தாயாரிடமும், உறவினர்களும் கூறிவந்த நிலையில் வற்புறுத்தி பள்ளிக்கு அனுப்பியதாலும், அதனைத் தொடர்ந்து பள்ளியில் இருந்துவந்த இரு ஆசிரியர்கள் தனது மகனிடம் பேசியதால் ஏதேனும் மிரட்டல்விடுத்து இருப்பார்களோ என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது என்றும், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் மிரட்டலுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் இதுபோன்று வேறு எந்தமாணவருக்கும் நேரிடக்கூடாது என பெற்றோர்கள் உறவினர்கள் கண்ணீர்மல்க தெரிவித்தனர்...

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision