செல்போனை தவிர்க்க மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

செல்போனை தவிர்க்க மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் குழந்தைகள் தின விழாவினை முன்னிட்டு விண்மதி மெட்ரிக்குலேசன் பள்ளி சார்பில் குழந்தைகள் செல்போனை தவிர்க்க வலியுறுத்தி பேரணி நடைபெற்றது. பேரணியை காவல் உதவி ஆய்வாளர் சரவணன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

வாகைக்குளம் பகுதி பள்ளி வளாகத்திலிருந்து புறப்பட்ட பேரணி, விராலிமலை சாலை, கோவில்பட்டி சாலை, புதுத்தெரு வழியாக பேருந்து நிலையம், பெரியார் சிலை சென்று பின் மீண்டும் பள்ளியை அடைந்தது. இதில் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்று, குழந்தைகள் செல்போனை தவிர்க்க வேண்டும்

குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டும், மைதானத்தில் விளையாட வேண்டும் என வலியுறுத்தி பதாகைகளை கைகளில் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும், இணையதளத்தில் தேடல் வேண்டாம் என கோஷமிட்டு சென்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO