சாயப்பட்டறை திடக்கழிவு மறு பயன்பாடு ஆராய்ச்சியில் வெற்றி - திருச்சி தேசிய கல்லூரி உதவி பேராசிரியர் செந்தில்குமார்
ஜவுளித் தொழிற்சாலைகள் இருந்து வெளியேற்றும் சாயக்கழிவுகளை சுத்திகரிக்கப்பட்ட பின்னரே வெளியேற்ற வேண்டும் என்ற அரசின் ஆணையின் படி சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகின்றன. அதேசமயம் இந்த கழிவுநீரை சுத்திகரிக்கும் பொழுது திரவ கழிவுகள் மறுசுழற்சிக்கு அல்லது வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் திடக் கழிவுகளாக கிடைக்கப் பெற்றவை மண்ணின் வளத்தைக் கெடுப்பதாகவும், அதிக நச்சுத்தன்மை வாய்ந்ததாக இருக்கின்றது. இதனை மண்ணிற்கு தீங்கு விளைவிக்காத வகையில் பயன்படுத்தும் வகையில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் திருச்சி தேசிய கல்லூரி தாவரவியல் பிரிவின் உதவிப் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் ஒரு புதிய முறையை கண்டறிந்துள்ளார்.
இதனுடைய பயன்பாட்டு ஆராய்ச்சி கட்டுரையை ஒரு சிறப்பு தொகுப்பாக இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இக்கழிவுகளை நீக்கும் தொழில் நுட்பத்தை குறித்து அவர் பகிர்ந்து கொள்கையில், பெருந்துறையில் சுமார் 2700 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வரும் சிப்காட், ஆசியாவின் மிகப் பெரிய தொழிற்பேட்டைகளில் ஒன்று. இங்குள்ள நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளில் சாயப்பட்டறைகளும் தோல் தொழிற்சாலைகளும் அடக்கம்.
ஒட்டுமொத்தமாக ஈரோடு மாவட்டத்திலிருந்து ஜவுளி ஏற்றுமதி அதிகயாய் நடைபெறுகிறது. இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையாக அமைந்தது காவிரி, பவானி நதிகளின் நீர். விவசாயத்திற்கு மட்டுமல்லாமல், ஈரோட்டின் தொழில்துறையே இந்த நீரை நம்பி உருவெடுக்க ஆரம்பித்தது. ஆனால், இப்படி பிரம்மாண்டமாக வளர்ந்த இந்த தொழில்துறையே ஆறுகளுக்கு எமனாகவும் மாற ஆரம்பித்தது. தோல் தொழிற்சாலைகளில் இருந்தும் சாயப்பட்டறைகளில் இருந்தும் இரவு - பகல் பாராது வெளியேற்றப்பட்ட கழிவுநீர் காவிரி, பவானி நதிகளை முற்றிலுமாக நாசம் செய்தனர்.
இப்படி பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு சவால்விடும் சாயப்பட்டறை கழிவுநீர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண 2006 இல் தொடங்கப்பட்ட ஆய்வில் சாயப்பட்டறை கழிவுநீரை பாக்டீரியா மூலம் சுத்திகரிக்கலாம் என்று தெரியவந்தது. ஆய்வக சோதனை மூலம் கண்டறியப்பட்ட சுத்திகரிப்பு முறை விரைவில் தசாயப்பட்டறைகள் சோதனை முயற்சியாக செயல்படுத்தினோம். சாயப் பட்டறைகளில் இருக்கும் பல ஆண்டாக வைக்கப்பட்டிருக்கும் திடகழிவுகளில் வாழும் பாக்டீரியா சிலவற்றை எடுத்து சாயக் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆய்வுக்கு பயன்படுத்தினாம். 97% சுத்திகரிக்கப்பட்ட நீர் மூலம் விவசாயம் செய்ய முடியுமா என்ற ஆய்விலும் வெற்றி கிடைத்தது.
இதன் அடுத்த கட்ட முயற்சி தான் நீரை சுத்திகரிக்கும் பொழுது வெளியேறும் திடக்கழிவுகளின் நச்சுத்தன்மையை நீக்குவதற்கான முறைகளை ஆராய்வதற்காக முயற்சித்தோம். திடக்கழிவுகளை வேதிய கழிவுகள் உயிரி கழிவுகள் என பிரிக்கப்பட்டு வேதிக்கழிவுகள் தற்போது சிமெண்ட் தொழிற்சாலைகளில் மறுபயன்பாட்டு முறையில் பயன்படுத்தப்படுகிறது. இந்த திடக்கழிவுகளை நேரடியாக மண்ணில் செலுத்தும்போது மண்ணின் வளமும் கெடுவதோடு அந்த மண் வேறு பயன்பாட்டிற்கே இல்லாமல் போகின்றது. தற்போது இது சாதாரண விஷயமாக இருந்தாலும், இன்னும் 50 ஆண்டுகளில் இது அதிதீவிர பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே இந்த கழிவுகளை சேகரித்து வைக்கும் இடங்களில் மண் வளம் முழுமையாக பாதிக்கப்படும். எனவே இதற்கான ஒரு முயற்சியாக இந்த உயிரி கழிவுகளோடு இயற்கையாக கிடைக்கும் பாக்டிரியா, மாட்டு சாணம் மற்றும் மண்புழுக்களை கொண்டு கழிவுகளில் உள்ள நச்சுத்தன்மை நீக்கப்பட்டு மறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் விதத்தில் மாறும் தன்மையை உருவாக்கியுள்ளோம்.
பெரும் தொழில் நுட்பங்கள் இல்லாமல் எளிமையாக கிடைக்கும் இம்முறையை ஒரு முறை தெரிந்து கொண்டாலே கழிவுகளை மண்ணின் வளத்தை கெடுக்காமல் நம்முடைய பயன்பாட்டிற்காக பயன்படுத்தலாம். மாட்டுசாணம், மண்புழு போன்றவற்றை பயண்படுத்துவதால் ஒரு மூன்று மாதங்களிலேயே உரமாக மாறி விடுகின்றது. விவசாய நிலங்களில் உரமாக பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றாலும், இதனை எப்போதும் கொட்டினாலும் அம்மண்ணின் தன்மை கெடாமல் இருக்கும். தமிழ்நாட்டில் ஆண்டிற்கு 10000 டன் திடக்கழிவுகள் ஜவுளி சாயப்பட்டறை தொழிற்சாலைகளிலிருந்து கிடைக்க பெறுகின்றன. கழிவுகள் அனைத்துமே சுத்திகரிக்காமல் நிலத்தில் நேரடியாக செலுத்தும் போது நிலத்தின் தன்மையை மாசுபடுத்தி விடுகிறது.
எனவே இதுபோன்ற தொழில்நுட்பங்கள் நிலத்தை பாதுகாப்பதோடு கழிவுகளை மறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த ஆய்வின் போது மேலும் கண்டறியப்பட்டது யாதெனில் இந்த கழிவுகள் ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட கழிவுகள் எனில் அதன் நச்சுத்தன்மையை நீக்குவதற்கும் உடனடி கழிவுகளை நச்சுத்தன்மை நீக்குவதற்கான காலகட்டம் வேறுபடுகிறது. எனவே கழிவுகளை உடனடியாகவே இதுபோன்ற நச்சுத்தன்மை நீக்கும் முயற்சி மேற்கொண்டால் மண்வளத்தை பாதுகாக்கலாம். ஆராய்ச்சிக்கு பெருந்துறையில் உள்ள பொது சுத்திகரிப்பு நிலையங்கள் பெரும் உதவியாக இருந்தது என்றார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn