திடீர் மழை - மகிழ்ச்சி அடைந்த திருச்சி மக்கள் - விவசாயிகள்

திடீர் மழை - மகிழ்ச்சி அடைந்த திருச்சி மக்கள் - விவசாயிகள்

கோடை காலம் துவங்குவதற்கு முன்பிருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்த‌ நிலையில், தற்போது அக்னி நட்சத்திரமும் துவங்கி பகல் நேரங்களில் கடும் வெப்ப அலைகள் வீசுவதால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் திருச்சி சுற்றுவட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக 110 டிகிரி பாரன்ஹீட்க்கும் மேல் வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் இன்று பகலில் வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்ய துவங்கியது. மிதமான மழையாக துவங்கி சற்று கனமழையாக பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் வெப்ப அலைகளின் தாக்கம் குறைந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

அதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது திருச்சி மாநகர் கன்டோன்மென்ட், உறையூர், மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், டிவிஎஸ் டோல்கேட் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்தக் கோடை மழையால் திருச்சியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision