தற்கொலை வழக்கு - போராட்டத்திற்கு பிறகு கொலை வழக்காக மாற்றம்

தற்கொலை வழக்கு - போராட்டத்திற்கு பிறகு கொலை வழக்காக மாற்றம்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வந்தலைக்கூடலூர் ஊரட்சியில் உள்ள விடுதலைபுரம் கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் மகன் முருகேசன் (50). இவர் அதே பகுதியில் உள்ள பெரிய குறுக்கை என்ற கிராமத்தில் சுமார் 90 ஏக்கர் பரப்பளவில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் அங்கேயே தங்கி தோட்ட தொழிலாளியாக கடந்த 4 மாதங்களுக்கு முன் வேலையில் சேர்ந்து வேலை செய்து வந்துள்ளார்.

இந்த பண்ணைத் தோட்டத்தினை விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (40) என்பவர் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக முருகேசன் மனைவி சகுந்தலா மற்றும் அவரது மகன்கள் முருகேசனின் செல்போனில் தொடர்பு கொண்டால், முருகேசன் போனை எடுத்துப் பேசாமல் தோட்டத்தினை நிர்வகிக்கும் செந்தில் எடுத்து முருகேசன் தோட்டத்தில் வேலை செய்து வருகிறார் என பதில் கூறியுள்ளனர்.

சந்தேகமடைந்த சகுந்தலா மற்றும் அவரது மகன்கள் நேரிடையாக தோட்டத்தில் சென்று பார்த்த போது, அங்கும் முருகேசனை நேரில் சந்திக்க முடியவில்லை. காரணம் என்னவென்று கேட்டால் தோட்டத்தில் வேலை செய்கிறார் என செந்தில்குமார் கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த 23 ம் தேதி செந்தில் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் முருகேசனை தலை, கன்னம், கால் ஆகிய பகுதியில் பலத்த ரத்த காயங்களுடனும், உடல் மிகவும் மெழிந்த நிலையில் முருகேசன் வீட்டில் படுக்க வைத்து விட்டுச் சென்றனர். அங்கு சில நிமிடங்களிலேயே முருகேசன் உயிரிழந்தார்.

இது குறித்து முருகேசனின் மனைவி சகுந்தலா கல்லக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீஸôர் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கல்லக்குடி போலீசார் விசாரணையும், நடவடிக்கையும் திருத்தி இல்லாததால், தோட்டத்தை நிர்வகிக்கும் செந்தில்குமாரை கைது செய்ய வேண்டும். முருகேசன் மரணத்தைக் கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். உயிரிழந்த முருகேசன் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென வலியுறுத்து கடந்த 3 நாட்களாக சடத்தை வாங்க மறுத்து வந்தனர்.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியினர் திருச்சி மாவட்ட செயலாளர் ஜெயசீலன் தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் மற்றும் முருகேசனின் மனைவி மற்றும் குழந்தைகள், அவரது உறவினர்கள், கிராம மக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கல்லக்குடி போலீசாரைக் கண்டித்து லால்குடி அரசு மருத்துமனை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கல்லக்குடி காவல் ஆய்வாளர் ( பொறுப்பு ) மாலதி, பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் உரிய சட்ட பிரிவுகளின் வழக்கு பதியப்படுமென கூறினார். இதனையடுத்து முருகேசனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

இப்போராட்டத்திற்கு பிறகு கல்லக்குடி போலீசார் தோட்டத்தின் உரிமையாளர் செந்தில்குமாரை பிடித்து விசாரணை செய்ததில், தோட்ட தொழிலாளி முருகேசன் சொன்ன வேலைகளை சரியாக செய்யாததால் கடந்த 11 ம் தேதி கடுமையாக தாக்கியதாகவும், இதில் படுகாயமடைந்த அவரை கடந்த 23 ம் தேதி அவரது வீட்டிற்கு சென்று விட்ட போது உயிரிழந்ததாக ஒப்புக் கொண்டதின் பேரில் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO