விவசாய பணிக்கு டீசல் மானியம் 3 ஆயிரம் வழங்கிட த.மா.க விவசாய அணி திருச்சி ஆட்சியரிடம் மனு
காவிரியில் தண்ணீர் வரத்தும், மேட்டூரில் நீர்கையிருப்பு போதுமான அளவு உள்ள நிலையில், தற்போது குறுவை சாகுபடியினை மேற்கொண்டுள்ள விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவருகின்றனர். அந்தவகையில் விவசாயிகள் பயன்படுத்தும் டிராக்டர் மற்றும் பம்ப்செட் மோட்டர்களுக்கான டீசல் விலை பலமடங்கு உயர்ந்துள்ள நிலையில் டீசல் மானியமாக ஏக்கருக்கு 3 ஆயிரம் வழங்கிடவும்
விதைநெல் மற்றும் சிறுதானிய விதைபொருட்களை முழுமானியத்துடன் வழங்கிட வேண்டும். கிணற்றுப்பாசனம் பெறும் பகுதிகளில் ஆழ்துழாய் கிணறு அமைக்க ஏதுவாக வேளாண்துறை வாயிலாக 50சதவீத மானியம் வழங்கிடவேண்டும், விவசாயத்திற்கு ஆள்பற்றாற்குறை நிலவிவருவதைக் கருத்திற்கொண்டு 100 நாள் வேலைதிட்டத்தில் உள்ளவர்களை விவசாயபணிக்கு திருப்பவேண்டும்.
பருவமழைக்கு முன்னதாக ஏரி, குளங்கள் மற்றும் வரத்துவாய்க்கால்களை தூர்வார அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்மாநில காங்கிரஸ் விவசாய அணி மாநில தலைவர் துவார் ரெங்கராஜ் தலைமையில் விவசாய சங்க நிர்வாகிகள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மேலும் வேளாண்துறை இணை இயக்குநரை சந்தித்து மனு அளித்த பின் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அரசு முன்னுரிமை அளித்து நிறைவேற்றித்தர நடவடிக்க எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr