திருச்சிக்கு வந்த தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு

திருச்சிக்கு வந்த தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு

திருச்சி தமிழ்நாடு காவல் பயிற்சி மையத்தில் முதலாவதாக ஒட்டுமொத்த பயிற்சி மையத்திற்கும் தேவையான காவிரி குடிநீர் இணைப்பை திருச்சி கமாண்டன்ட் ஆனந்தன் தொடங்கி வைத்து அதற்கான கல்வெட்டை திறந்து வைத்து பயிற்சி மைய வளாகத்திற்குள் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். 

மேலும் சென்னையில் இருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவின் ஆய்வாளர் ரவி மற்றும் உதவி ஆய்வாளர் சூசைராஜ் ஆகியோர் தலைமையில் திருச்சிக்கு வந்துள்ள 120 வீரர்களும், இணைந்து நடத்தி காட்டிய மீட்பு பணி ஒத்திகை நிகழ்ச்சியை பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கமாண்டண்டுகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இதில் மொத்தம் 9 பட்டாலியன்களின் கமாண்டன்டுகள், 10 துணை கமாண்டன்டுகள், 8 உதவி கமாண்டன்டுகள் பங்கேற்றனர். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் திருச்சி கமாண்டன்ட் ஆனந்தன் தலைமை தாங்கினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision