தமிழக விவசாயிகள் சங்க தலைவர் திருச்சி ஆட்சியர் குடியிருப்பு முன்பாக போராட்டம்!!
திருச்சியில் மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு வாயிலில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ம.ப.சின்னத்துரை போராட்டத்தில் ஈடுபட்டார்.
Advertisement
அப்போது பேசிய அவர் சட்டப்படி கிராம சபை கூட்டத்தை குடியரசு தினத்தன்று கூட்ட வேண்டும்.விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் அரசு திரும்பப் பெற வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.மழையால் பாதிக்கப்பட்ட வேளாண் பயிர்களை கணக்கிட்டு, விவசாயிகளுக்கு நிவாரணமும் , இழப்பீடும் வழங்க வேண்டும்.
Advertisement
1988ல் விவசாயிகளது போராட்டத்தின் போது, புள்ளம்பாடி துப்பாக்கிச் சூட்டில் பலியான நாகராஜன், ஜெரோமியா குடும்பத்தினருக்கு நிவாரணமும், அரசு வேலையும் வழங்க வேண்டும்.கட்சத்தீவை மீட்டு மீனவர்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் திறப்பிற்கு வாகனங்களில் வர வேண்டும் என சொல்லுகிறது அதிமுக அரசு.
அதிமுக அரசு குடியரசு தினத்தன்று கடற்கரைக்கு மக்கள் வருவதை தடுப்பதை கண்டிக்கிறோம். ஆனால் கிராம சபைக் கூட்டத்திற்கு தடை விதித்திருக்கிறது இதை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு அலுவலகம் முன்பாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ம.ப.சின்னத்துரையை கே.கே.நகர் காவல்துறையினர் கைது செய்தனர். முன்னதாக அவர் ஒருவர் ஒத்தைக்கு ஒத்தையாக தனியாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement