முசிறியில் தமிழக வெற்றிக்கழக மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம், முசிறி கைகாட்டியில் தமிழக வெற்றிக்கழக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் மகளிர் அணி சார்பாக வீட்டுப் பெண்களின் பாதுகாப்பை பறிக்கும் மாநில அரசை கண்டித்தும், போதை கலாச்சாரத்தை அதிகரிக்கும் திராவிட மாடல் என்ற பெயரில் தமிழக மக்களை கொன்று தீர்க்கும் திமுக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக வெற்றிக்கழக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன்மோகன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.மகளிர் அணி நிர்வாகிகள் மகளிருக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், அதிகரித்து வரும் போதை கலாச்சாரத்தை கண்டித்தும் பேசினர். பின்னர் கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் முசிறி, தொட்டியம், தா.பேட்டை, துறையூர், உப்பிலியபுரம் ஒன்றியங்களை சேர்ந்த நிர்வாகிகள், மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர். முசிறி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision