திருச்சி புனித வளனார் ஜோசப் கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி

திருச்சி புனித வளனார் ஜோசப் கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி

திருச்சி புனித வளனார் ஜோசப் கல்லூரியில்  வணிகவியல் துறை மற்றும் ATAL  அமைப்பு இணைந்து ஆசிரியர்களுக்கான தேசிய அளவிலான திறன் மேம்பாட்டு பயிற்சி இணைய வழியில் கடந்த ஆகஸ்ட் 23 முதல்27 வரை நடைபெற்றது. இந்த திறன் மேம்பாட்டு பயிற்சியில் ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் உட்பட 193 பேர் 22 மாநிலங்களில் இருந்து பல்வேறு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 5 நாட்கள் திறன் மேம்பாட்டு நிகழ்வை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர். எம்.செல்வம் தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் தமிழகத்தின் பாரம்பரியங்களை சுமக்கும் மாவட்டங்களில் திருச்சியும் மிக முக்கியமானது. குறிப்பாக நம்முடைய கலை மற்றும் பண்பாட்டில் திருச்சி காவேரி ஆறு, ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்லணை அணை, மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம் ஆகியவை நம் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் சான்றுகளாகத் திகழ்கின்றன.

மேலும் அவர் கூறுகையில் திருச்சியில் 177 ஆண்டுகளாக தனித்துவத்தோடு பல்வேறு சிறப்புகளோடு கல்வியாளர்களை உருவாக்குவதில் சிறந்து விளங்கி கொண்டிருப்பதாக ஜோசப் கல்லூரியைப் பற்றி கூறினார். இந்த ஐந்து நாட்கள் நடைபெற்ற ஆசிரியர் திறன் மேம்பாட்டு   பயிற்சியானது "Heritage manegment: A bussiness perspective" என்ற கருப்பொருளுடன் நடைபெற்றது. விழாவில் தொல்லியல் துறை சார்ந்த நிபுணர்களும் கலந்து கொண்டனர். அகமதாபாத் பல்கலைக்கழகம், அமிட்டி பல்கலைக்கழகம் மற்றும் புனிதவளனார் ஜோசப் கல்லூரி  மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். 

தொடக்க விழாவில் புனித வளனார் ஜோசப் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் வி. அலெக்ஸ் ரமணி மற்றும் துணை முதல்வர் பிரின்ஸ் டாக்டர் ஜான் பீட்டர் ஆகியோர் கலந்து கொண்டனர். FDP ஒருங்கிணைப்பாளர் அலெக்சாண்டர் பிரவின் துரை வரவேற்புரை வழங்கினார். விழா நிறைவில், பீகான் கிரீன் டெக் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி & துணைத் தலைவர் அண்ணாமலை செந்தில்குமார் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில்.. நாம் எப்போதுமே நம்மை சுற்றியுள்ள பாரம்பரியங்களையும்   பண்பாட்டு வரலாற்றையும் தெரிந்து கொள்ளுதலும், அவற்றை பிறருக்குத் தெரியபடுத்துவதிலும் முனைப்பாக செயல்படுதல் வேண்டும். 

நாம் அனைவருமே நம்மை சுற்றியுள்ள சுற்றுலா தளம் குறித்த பாரம்பரியத்தை பண்பாடுகளை தெரிந்து வைத்துக் கொள்ளுதல் அவசியமானது என்றார். ரெவ். டாக்டர் பீட்டர் ஒரு தனித்துவமான தலைப்பின் கீழ் ஒரு அற்புதமான நிகழ்ச்சி குறித்து வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்திய போது, ​​தனது வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டார். நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அளிக்கப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn