தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோவில்!!

தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோவில்!!

கிழக்கு தொடர்ச்சி மலைகளில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது தலைமலை காப்புக்காடு. இங்கே தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயில் (தலைமலை நல்லேந்திர வரதராஜ பெருமாள்) என்று அமைந்துள்ளது தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி - நாமக்கல் எல்லையில் காணப்படும் கோவிலாகும்.

கடல் மட்டதிலிருந்து சுமார் 3200 அடி உயரம் கொண்ட இந்த தலைமலை தமிழகத்தின் 10 கடினமான மலை ஏற்றங்களில் ஒன்றாக கருத்தப்படுகிறது. மலை உச்சியிலே உள்ள கோவிலில் உள்ள பெருமாள் (நல்லேந்திர பெருமாள்) சுயம்புவாக அறியப்படுகிறார். மேலும் இந்த கோவில் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. வருடத்தில் புரட்டாசி மாதங்களில் மட்டுமே மக்கள் அதிகம் செல்லும் கோவில்களில் ஒன்று ஆகும். நம் திருச்சி மாவட்டத்தில் இருந்து 65 கிலோமீட்டரில் அமைந்துள்ள இந்த பெருமாள் கோவிலின் மலையேற்றம் சிறப்பு வாய்ந்த ஒன்று.

தூரத்தில் இருந்து பார்க்கும்போது மனித தலை போன்ற அமைப்பில் இருப்பதால் இம்மலையை தலைமலை என்று அழைக்கின்றனர். புரட்டாசி மாதம், பெருமாளுக்கு உகந்த மாதமாக பார்க்கப்பட்டு அனைத்து சனிக்கிழமைகளும் பெருமாளுக்கு சிறப்பு பூஜை செய்யப்படும், இதனால் தலைமலைக்கு வரும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும், இதில் தலைமலைக்கு செல்வது மலையேற்றம் செய்பவர்களுக்கு அதிக சந்தோசத்தை கொடுக்க கூடியது.

பல்வேறு மூலிகைகள் நிறைந்த இந்த மலை, புராணத்தின் படி உடல்நிலை சரியில்லாத லட்சுமணனுக்காக ஆஞ்சநேயரால் எடுத்து செல்லப்பட்டு, பின்பு மலையின் வாசத்தினாலயே உடல்நிலை சரியானதும் அந்த மலையை தூக்கி வீச ஏழு துண்டுகளாகி விழுந்ததில் இந்த தலைமலையும் ஒன்றென கூறுகின்றனர். திருச்சி மாவட்டம் நீலியாம்பட்டி மற்றும் சஞ்சீவிபுரத்தில் இருந்து, நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி, செவந்திபட்டி, வடவத்தூர் வழியாகவும் இந்த மலையின் மேல் செல்லலாம்.

நீலியாம்பட்டி வழியாக ஏறுவது தூரம் அதிகமாக இருந்தாலும், பாதை அதிக செங்குத்தாக இல்லாமல் இருக்கும், மற்ற வழிகளில் ஏறும்போது பாதைகள் செங்குத்தாகவும் கொஞ்சம் கடினமாகவும் இருக்கும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision