நாய் குரைத்த விவகாரம் - இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் அடித்துக்கொலை

நாய் குரைத்த விவகாரம் - இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் அடித்துக்கொலை

திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வந்தார். நேற்று இரவு தெருவில் பூக்கொல்லை பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் நடந்து சென்றுக்கொண்டிருந்தார்.

அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி முத்துகிருஷ்ணனுக்கு சொந்தமாக நாய் குரைந்திருக்கிறது. இதனால் இரண்டு பேருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஆகியுள்ளது. இந்த சம்பவத்தில் ஆத்திரம் அடைந்த இருவரும் ஒருவரை ஒருவர் மாரி மாரி தாக்கி கொண்டதில் இருவருமே காயமடைந்துள்ளனர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி முத்துக்கிருஷ்ணன் தலையில் பலத்த காயம் அடைந்ததார்.

உடனடியாக அவர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாய் குறைத்ததற்காக கொலை நடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision