தேர்தலுக்காக தான் காவிரி குண்டாறு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திருச்சியில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு பேட்டி

தேர்தலுக்காக தான் காவிரி குண்டாறு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திருச்சியில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு பேட்டி

தேர்தலுக்காக தான் காவிரி குண்டாறு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திருச்சியில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு பேட்டி.பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திமுக சார்பில் திருச்சி மாவட்ட அலுவலகம் அருகில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளர் கே‌.என்.நேரு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த கே.என் நேரு..... திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதன் பேரில் தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார். திருச்சி மாவட்டத்தில் இரண்டு எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக இருந்தும், இந்நாள் வரை முதியோர் மற்றும் திருமண உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்கள் முறையாக செயல்படாமல் உள்ளது. மத்திய அரசுக்கு அடிபணிந்து விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டம், நீட் தேர்வு ஆகியவற்றை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது. தேர்தலுக்காக காவிரி குண்டாறு திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு எவ்வித பயனுமில்லை. பரம்பரை விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். திமுக ஆட்சி காலத்தில் தான் திருச்சி மாவட்டம் வளர்ச்சி அடைந்துள்ளது. கூட்டணியில் யாரை இணைக்க வேண்டும், இணைக்க கூடாது என்பதை தலைவர் முடிவு செய்வார். மக்கள் நீதி மையத்திற்கு தூதுவிட்டது எங்களுக்கு தெரியாது.

நாங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததை தான் ஒற்றர்கள் மூலம் தெரிந்து கொண்டு முதலமைச்சர் செய்து வருகின்றார். மக்கள் நீதி மையத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து தலைவர் மு.க ஸ்டாலின் தான் முடிவெடுப்பார். மே 1ம் தேதி தமிழகத்திற்கு மோடி வந்த பிறகு தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பார்கள்.  என தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH