திருச்சியில் வருகிற 30-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் திருச்சியில் முடிவுற்ற பல்வேறு நலத் திட்டங்களை துவக்கி வைத்தும், புதிய நலத் திட்டங்களை துவக்கி வைக்கவுள்ளார். திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு ரூபாய் 400 கோடியில் அடிக்கல் நாட்டு பணிகளும், ஒட்டு மொத்தமாக 604.10 கோடி செலவில் அடிக்கல் நாட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது.
மேலும் திருச்சி புதிதாக கட்டப்பட்டுள்ள சத்திரம் பேருந்து நிலையத்தை மக்கள் பயபாட்டிகு திறக்க வைக்க உள்ளார். திருச்சி தாயனூரில் நடைபெற உள்ள நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (பேரூராட்சிகள்) கால்நடை பராமரிப்பு துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை,
வேளாண்மை மற்றும் உலக நலத் துறை, தோட்டக்கலை துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆதிதிராவிடர் நலத்துறை மாவட்ட தொழில் மையம் பணிகள் முடிவுற்ற நிலையில் ரூபாய் 15,32,153 செலவில் அனைத்து திட்ட பணிகள் திறப்பு விழா நடைபெற உள்ளது.
முதியோர் உதவித்தொகை பட்டா வழங்குதல் விதவை உதவித்தொகை தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மகளிர் குழுக்களுக்கு கடன் உதவி என மாவட்டம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் பேருக்கு ரூபாய் 1084.80 கோடி செலவில் நலத்திட்ட உதவிகளும் வழங்க உள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Eyd4BfTFH1SEyxmvvYevul
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn







Comments