குழந்தைகளுக்கான நடை எனும் விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்க செயல்பாட்டினை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
நவம்பர் 14 இன்று குழந்தைகள் தினம். நவம்பர் 19 உலக குழந்தைகள் மீதான வன்முறை தடுப்பு தினம் மற்றும் நவம்பர் 20 சர்வதேச குழந்தைகள் தினம் ஆகியவற்றை முன்னிட்டு இன்று (14.11.2024) 'குழந்தைகளுக்கான நடை" என்ற பெயரில் விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இப்பேரணியின் துவக்கத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை வரவேற்கும் விதமாக வீரவிளையாட்டான வாள் வீச்சு, சிலம்பாட்டம் மற்றும் கலைநிகழ்ச்சியான பரதநாட்டியம் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கையெழுத்து இயக்க பதாகையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் கையொப்பமிட்டு பேரணியை கொடியசைத்து துவங்கி வைத்தார். இப்பேரணியானது மாவட்ட ஆட்சியரகத்தில் தொடங்கி சேவா சங்கம் பள்ளி மைதானம் வரை சென்று நிறைவு பெற்றது.
இவ்விழிப்புணர்வு பேரணியின் ஆடை நிறக்குறியீடு 'நீலம்" என்பதால் கலந்து கொண்ட அனைவரும் நீல ஆடை அணிந்து வந்துடன் நீல நிற தொப்பி, நீல குடை மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைத்துகொண்டும். வாகனத்தில் ஒலிப்பெருக்கி மூலமாக வாசகங்கள் வாசிக்கப்பட்டும் குழந்தைகளின் பாதுகாப்பு, உரிமைகள், மற்றும் குழந்தைகள் தொடர்பான சட்டங்கள் குறித்தும்,
குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண்ணான 1098 குறித்தும், குழந்தைகளுக்காக செயல்படக்கூடிய அரசு அமைப்புகள் குறித்தும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு பேரணியில் குழந்தைகள். கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இப்பேரணியின் இறுதி நிகழ்வாக திருச்சி சேவா சங்கம் மேல்நிலைப்பள்ளியில் வீர விளையாட்டுகள், பரத நாட்டியம், யோக மற்றும் தமிழக அரசினால் செயல்படக்கூடிய திட்டங்கள் குறித்த மெளன நாடகம் நடத்தப்பட்டது. இப்பேரணியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ/மாணவியர்கள் மற்றும் கலைநிகழ்ச்சியில் பங்குபெற்ற குழந்தைகளுக்கு பங்கேற்பு சான்று வழங்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில், உதவி ஆட்சியர் (பயிற்சி) அமித்குப்தா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராகுல்காந்தி, அரசு அலுவலர்கள், காவல்துறையினர், போக்குவரத்து காவல்துறையினர், தொண்டு நிறுவன பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மாவட்ட குழந்தை பாதுகாப்பு உதவி மைய பணியாளர்கள் மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision