திருச்சிக்கு வருகை தர குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுத்த அமைச்சர்

திருச்சிக்கு வருகை தர குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுத்த அமைச்சர்

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு பெருந்திரளணி விழா (ஜம்போரி), மணப்பாறை சிப்காட் வளாகத்தில் ஜனவரி 28ம் தேதி தொடங்கி பிப்ரவரி 3ம் தேதி வரை நடக்கிறது.

தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் பிரமாண்டமாக நடந்து வருகிறது. இதற்காக, சாரண, சாரணியர்கள், அதிகாரிகள் தங்குவதற்காக 2 ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட கூடாரங்கள். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளியலறைகள், கழிப்பிடங் கள், 72 சமையல் கூடங்கள், 30க்கும் மேற்பட்ட உணவு அருந்தும் கூடங்கள், பாதுகாப் பிற்காக 350க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள். 50க்கும் மேற்பட்ட கடைகளுடன் கூடிய மார்க்கெட் என பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இவ்விழாவில், ஜனாதிபதி, பிரதமர், கவர்னர், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மத்திய மத்திஅமைச்சர்கள், வெளிமாநில முதல்வர்கள் போன்ற பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தமிழக சாரண, சாரணியர் இயக்கத் தலைவரான, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி, டில்லியில் நேற்று, ஜனாதிபதி திரவுபதி முர்முவை அவரது மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

அப்போது, மணப்பாறையில் வரும் 28ம் தேதி தொடங்க உள்ள பெருந்திரளணி குறித்த தகவல்களை தெரிவித்து, நடந்து வரும் முன்னேற்பாடுகளின் நிலை குறித்தும் ஜனாதிபதியிடம் எடுத்து கூறினார். தொடர்ந்து, டில்லியில் உள்ள பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் தேசிய தலைமையகத்தில், தேசிய முதன்மை கமிஷனர் கண்டேல்வால், தலைவர் அனில்குமார் ஜெயின் ஆகியோரையும் சந்தித்து, திருச்சி தொடர்பாக பெருந்திரளணி மேற்கொண்டார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision