இடைத்தரகர் இல்லாமல் ஆயிரம் விவசாயிகள் பயன் பெறும் நிறுவனத்தில் உலகவங்கி அலுவலர்கள் ஆய்வு
தமிழ்நாடு நீர்பாசன நவீனமயமாக்கல் திட்டத்தின்கீழ் உலகவங்கி அலுவலர்கள் குழு திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டாரம் கீழக்குறிச்சி கிராமம் மற்றும் புள்ளம்பாடி வட்டாரத்தில் உள்ள சாத்தப்பாடி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை ஆய்வு செய்தனர். கீழக்குறிச்சியில் உள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனமானது உலகவங்கியின் 100 சதம் நிதி உதவியின் மூலம் செயல்படுத்தப்படும்.
தமிழ்நாடு நீர்பாசன நவீனமயமாக்கல் திட்டம்-ஐ ன் கீழ் 2020ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனமானது 1000 விவசாயிகள் ரூ.1000/- பங்கு தொகை செலுத்தி ரூ.10.00 இலட்சம் பங்குத்தொகை செலுத்தி தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்திற்கு பல கட்டங்களாக கடந்த மூன்று வருடத்தில் ரூ.60.00 இலட்சம் வரை நிதி உதவி வழங்கப்பட்டது. இதன் மூலம் விவசாயிகள் பலவகை பலன்களை பெற்றுள்ளனர். சாத்தப்பாடியில் உள்ள புள்ளம்பாடி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்க்கு இதே போல் உலகவங்கியின் 100 சதம் நிதி உதவியின் மூலம் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு நீர்பாசன நவீனமயமாக்கல் திட்டம்-ஐஐ ன் கீழ் 2021ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த நிறுவனமானது 500 விவசாயிகள் ரூ.1000/- பங்கு தொகை செலுத்தி ரூ.5.00 இலட்சம் பங்குத்தொகை செலுத்தி தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்திற்கு பல கட்டங்களாக கடந்த இரண்டு வருடங்களில் ரூ.50.00 இலட்சம் வரை நிதி உதவி வழங்கப்பட்டு விவசாயிகள் பலவகை பலன்களை பெற்றுள்ளனர். இரண்டு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்ட விவசாய விளைபொருட்களை ஒருங்கிணைத்து மதிப்பு கூட்டி விற்பனை செய்ய பயன்படும் எண்ணெய் செக்குகள், கடலை உடைக்கும் இயந்திரம், மாவு அரைக்கும் இயந்திரம் ஆகியவற்றின் பயன்பாடுகளை உலக வங்கி அலுவலர்கள் ஆய்வு செய்தனர். மேலும், கீழக்குறிச்சியில் உள்ள நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளால் பயன்படுத்தப்பட்டு வரும் டிராக்டர், வைக்கோல் கட்டும் இயந்திரம் மற்றும் நடவு இயந்திரம் ஆகியவற்றின் பயன்பாடுகள் குறித்தும் விவசாயிகளிடம் கலந்துரையாடி விபரங்களை அறிந்து கொண்டனர்.
மிக முக்கியமாக விவசாயிகள் நேரடியாக தங்களது விலை பொருட்களை உழவர் உற்பத்தியாளர் மையங்களில் விற்பனை செய்கின்றனர். இடைத்தார்கள் இல்லாமல் தங்களது பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கிறது. இது ஒரு நிறுவனம் இதில் ஆயிரம் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். ஒவ்வொரு பொருளும் விவசாயிகளிடமிருந்து நேரடியாக பெறப்பட்டு சில பொருட்கள் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாகவும் உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் விற்கப்படுகிறது.சில பொருட்களை இந்நிறுவனத்தில் உள்ள ஆயிரம் விவசாயிகள் நேரடியாக வாங்கி பயன் பெறுகின்றனர்.
இவ்விழாவில் உலக வங்கி நிர்வாகிகள் ஜுப் ஸ்டாவ்டிஸ்டிக், சஞ்ஞித்குமார், குந்தன்சிங் மற்றும் MDPU நிபுனர்கள் கிருஷ்ணன், கஜேந்திர பாண்டியன், விஜயராம் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுடன் திருச்சிராப்பள்ளி, துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) கு.சரவணன் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் மேமன் உடனிருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision