விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டிய மாவட்ட ஆட்சித் தலைவர்

விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டிய மாவட்ட ஆட்சித் தலைவர்

திருச்சிராப்பள்ளி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பாக போதைப் பொருட்களைத் பயன்படுத்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு தொடர்பாக மாவட்ட அளவில் நடைபெற்ற மாரத்தான், கட்டுரை போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சியில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் முதல் மூன்று இடங்களில் வெற்றிப்பெற்ற 6 மாணவ, மாணவிகளுக்கு முறையே 10,000, 5000, 2500 ரூபாய் வீதம் பணத் தொகைக்கான காசோலைகளையும், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு போதைப்பொருட்களுக்கு எதிரான நடைபெற்ற கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப்போட்டிகளில் வெற்றிப்பெற்ற

4 கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த 24 மாணவ மாணவிகளுக்கு அவர்களது புகைப்படம் அச்சிடப்பட்டு பெயர் பொறிக்கப்பட்ட கேடயங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கி, மாணவ மாணவிகளை ஊக்குவித்த ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் பாராட்டினார். இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் “போதைப் பொருளை ஒழிப்போம் சமுதாயத்தைப் பாதுகாப்போம்“ என்கின்ற வாசகம் அடங்கிய மஞ்சள் பை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், கலால் உதவி ஆணையர், ரங்கசாமி, முதன்மை கல்வி அலுவலர் அலுவலக நேர்முக உதவியாளர் முஹம்மது பாரூக், கோட்டக்கலால் அலுவலர் பிரகாஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆண்டனி ஜோயல் பிரபு, கலால் அலுவலக மேலாளர் கருணாநிதி, கோட்டக்கலால் அலுவலர் சாந்தகுமார் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn