பிரபல நாளிதழ் நிருபரை மிரட்டியதாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கைது

பிரபல நாளிதழ் நிருபரை மிரட்டியதாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கைது

திருச்சி மாவட்டம் துறையூர் பச்சபெருமாள்பட்டி ஊராட்சி தங்கநகரைச் சேர்ந்த சோலைமுத்துவின் மனைவி சுமதி (40). உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது கணவர் வெளியே சென்றிருந்த போது, பச்சபெருமாள்பட்டி முன்னாள் ஊராட்சி தலைவியின் கணவர் பட்டாணி என்கிற ராஜேந்திரன் (55),

சப்தமின்றி வீட்டுக்குள் நுழைந்து தான் குளிப்பதை ரகசியமாக படமெடுத்து, அதை வெளியே சொல்லாமலிருக்க தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள சொல்லி, கடந்த சில வருடங்களாக தன்னை துன்புறுத்தியதாகவும், அடிக்கடி தனது வீட்டுக்கு வந்து தொந்தரவு செய்வதாகவும், வீட்டிற்கு வந்து தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் சப்இன்ஸ்பெக்டர் பெரியமணி, ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்ததன் பேரில், மேற்படி செய்தி பிரபல நாளிதழ்களில் செய்தியாக வெளிவந்தன. இதில் ராஜேந்திரன், உப்பிலியபுரம் காவல்துறையினரை கவனித்ததன் விளைவாக, கைது செய்யாமல் சுதந்திரமாக உலவியதன் பேரில் முன் ஜாமீன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

நிபந்தனை ஜாமீனில் வந்த ராஜேந்திரன் , உப்பிலியபுரம் பகுதி பிரபல நாளிதழ்களின் நிருபர் பி.மேட்டூரில் உள்ள அவரது கடைக்கு சென்று, தனது பெயரை பத்திரிக்கையில் செய்தியாக்கி அசிங்கப்படுத்தி விட்டதாக, நிருபரை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிய வருகிறது. இது பற்றி நிருபர் உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

புகாரின் அடிப்படையில் முசிறி டிஎஸ்பி அருள்மணி உத்தரவின் படி, துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் பரிந்துரையின் பேரில், உப்பிலியபுரம் சப்இன்ஸ்பெக்டர் பெரியமணி, ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்தார். வழக்கு பதிவு செய்ததன் அடிப்படையில் உப்பிலியபுரம் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO