திருச்சியில் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு சிறிய அளவிலான தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நாளை 10.07.2021 தீர்வு
சிறிய அளவிலான தேசிய மக்கள் நீதிமன்றம் நாளை 10.07.2021 திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு (NALSA) புதுடெல்லி மற்றும் தமிழ்நாடு, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சென்னையின் வழிகாட்டுதலின்படி திருச்சிராப்பள்ளி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமாகிய கிளாட்ஸ்டன் பிளாசட் தாகூரின் உத்தரவின்படி நடைபெற உள்ளது.
தேசிய மக்கள் நீதிமன்றதன்று திருச்சிராப்பள்ளி நீதிமன்றங்களில் மூன்று மக்கள் நீதிமன்ற அமர்வுகளும் மணப்பாறை, துறையூர், முசிறி, லால்குடி, மற்றும் ஸ்ரீரங்கம் நீதிமன்றங்களை தலா 1 மக்கள் நீதிமன்றம் அமர்வுகளும் ஆக மொத்தம் 8 அமர்வுகள் மேற்படி வழக்குகளில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் அழைத்து சமரச முறையில் பேசி வழக்குகளை சிறிய அளவிலான தேசிய மக்கள் நீதி மன்றத்தில் தீர்வு காணப்படும்.
இதர நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள், சமரச செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள், ஜீவனாம்சம் கோரிய வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு கோரிய வழக்குகள், தொழிலாளர் நலன் தீர்ப்பாயத்தில் நஷ்ட ஈடு கோரிய வழக்குகள்,அரசு நல ஆர்ஜித சம்பந்தப்பட்ட இழப்பீடு போன்ற வழக்குகளில் இருதரப்பினரிடையே பேசி மக்கள் நீதிமன்றத்தில் சுமூக முறையில் நிரந்தர தீர்வு காணப்படும்.
மேலும் வங்கிகளின் வாராக்கடன் வழக்குகள் மற்றும் காசோலை மோசடி வழக்குகளில் சமரச முறையில் தீர்வு காண பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன. ஒவ்வொரு மக்கள் நீதிமன்ற அமர்விலும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி அல்லது சார்பு நீதிபதி அல்லது தற்போது பணியில் உள்ள நீதிபதி அவர்கள் தலைமையில் ஒரு வழக்கறிஞர் மற்றும் ஒரு சமூக ஆர்வலர் ஆகியோர் உறுப்பினராக செயல்பட்டு இருதரப்பினரையும் கலந்து ஆலோசித்து வழக்குகளை சமரச முறையில் தீர்வு செய்வார்கள்.
மேற்படி மக்கள் நீதிமன்றத்திற்கு அனைத்து ஏற்பாடுகளினை திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியுமாகிய கிளாட்ஸ்டன் பிளாசட் தாகூர் ஆலோசனைப்படி திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும்/சார்புக் நீதிபதியுமாகிய K.விவேகானந்தன் செய்து வருகிறார்கள்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO