திருச்சியில் கோவாக்சின் தடுப்பூசி இரண்டாம் தவணை போட்டுக் கொள்வதற்காக அதிகநேரம் காத்திருக்கும் பொதுமக்கள்

திருச்சியில் கோவாக்சின் தடுப்பூசி இரண்டாம் தவணை போட்டுக் கொள்வதற்காக அதிகநேரம் காத்திருக்கும் பொதுமக்கள்

திருச்சி மாவட்டத்தில் முதல் தவணையின்   போது கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்ட பயனாளர்கள் தங்களுடைய இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்திற்கான தடுப்பூசிகள் 5,400 முதல் 6,200 வரை கோவாக்சின் தடுப்பூசிகள்மட்டுமே கிடைக்கப்பெறுகின்றன.

ஆனால் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்வோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதாகவும், இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் அதிக நேரம் வரிசையில் நிற்க இயலாமல் பின்னர் போட்டுக் கொள்ளலாம் என்று திரும்பி செல்லும் சூழல் உருவாகியுள்ளது.

கோவாக்சின் செலுத்திக்கொண்ட முதியவர்களுக்கு எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்று ஆய்வுகள் கூறும் நிலையில் கோவாக்சின் தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணைகளுக்கு இடையே ஒரு மாத கால இடைவெளி இருப்பதால் வெளிநாடு செல்பவர்களும் செலுத்திக் கொள்வதற்கு முன் வருகின்றனர். ஆனால் தடுப்பூசி முகாம்களில் இரண்டாம் தவணை செலுத்துபவர்களுக்கு என்ற தனி வரிசை இல்லை.

அதுமட்டுமின்றி முதல் முறை தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கின்றது. தடுப்பூசி போடப்படும் முகாம்களில் குறிப்பிட்ட மையங்களில் மட்டுமே கோவாக்சின் கிடைப்பதால் அதிக மக்கள் அம் மையங்களில் கூட்டம் கூடுவதற்கான வாய்ப்புகளும் உண்டாகின்றது.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்.. முதியவர்களுக்கு அதிக எண்ணிக்கையில் முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு விட்டது. ஆனால் மாநகருக்கு 40 முதல் 50 சதவீத தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்பட்டு வரும் நிலையில், இரண்டாம் தவணை தடுப்பூசி போடுவது அதிக சிக்கல்கள் ஏற்படுகின்றன.

தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கும் ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே தடுப்பூசிகள் போடுவதற்கான டோக்கன்கள் தீர்ந்து விடுகின்றன. இரண்டாம் தடுப்பூசி போட்டு போட்டுக் கொள்பவர்கள் வரும் வரை மக்களை காத்திருக்க செய்வது இயலாது. எனவே இனிவரும் காலங்களில் தனி ஒரு வரிசையை அமைத்து இரண்டாம் கட்ட தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW