பட்டையை கிளப்பிய பங்குச்சந்தை புதிய உச்சம்...காரணம் என்ன?

பட்டையை கிளப்பிய பங்குச்சந்தை புதிய உச்சம்...காரணம் என்ன?

கடந்த மாதம் செப்டம்பர் முதல் அக்டோபர் இறுதி வரை இறங்குமுகமாக இருந்த இந்திய சந்தைகள். அதன்பின்னர், நவம்பர் தொடக்கம் முதல் பங்குச்சந்தை மீண்டும் மீண்டும் உயரத் தொடங்கியது என்றாலும், பங்குச்சந்தை மீண்டும் காளையின் பிடிக்கும் கரடியின் பிடிக்கும் கட்டுப்பட்டு முரண் பிடித்து வந்தது. பின்னர் இம்மாத தொடக்கம் முதல் இந்திய பங்குச்சந்தைகள் ஏறுமுகத்திலேயே இருந்தன.

அந்நிய முதலீட்டாளர்கள் அதிக அளவில் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்தல், சர்வதேச பங்குச்சந்தைகளின் சாதக நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பங்குச்சந்தைகள் ஏறுமுகத்தில் உள்ளன. இந்நிலையில், இந்திய பங்குச்சந்தைகள் நேற்று புதிய உச்சம் தொட்டது. நான்கு மாநில தேர்தலில் பாஜக 3 மாநிலங்களில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய முக்கியமான ஹிந்தி மாநிலங்களில் பாஜக பெற்ற பெரும்பான்மை வெற்றி, நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும் என்பதாலும் 65 நாடாளுமன்ற தொகுதிகள் மேற்கண்ட மூன்று மாநிலங்களில் உள்ளதாலும், பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகத்திற்கு ஒரு பெரிய ஊக்கமாக கருதப்படுகிறது.

மேலும் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் முதலீட்டாளர் நட்பு முயற்சிகளுக்கு வழி வகுக்கும் என்ற காரணத்தினால் இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்தன. இந்நிலையில் இந்திய பங்குச்சந்தை நேற்று காலை தொடங்கியதும் புதிய உச்சம் பெற்றது. வர்த்தகத்தின் இறுதியில் பிஎஸ்இ சென்செக்ஸ் குறியீடு 1383.93 புள்ளிகள் அல்லது 2..05 சதவிகிதம் உயர்ந்து புதிய 52 வார அதிகபட்சமாக 68,918 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி-50 இன்டெக்ஸ் 418.90 புள்ளிகள் அல்லது 2.07 சதவிகிதம் அதிகரித்து 52 வார அதிகபட்சமாக 20, 702 ஆகவும் உயர்ந்துள்ளது. பேங்க் நிஃப்டி சுமார் ஆயிரத்து 617.20ம் புள்ளிகள் அதிகரித்து 46 ஆயிரத்து 431 புள்ளிகளை தொட்டுள்ளது.

இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம் தொட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். வரும் காலங்களில் 20,700 ஐ தொடவாய்ப்பு உள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது சரிதான் போல....

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய..

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision