திருச்சி மாநகராட்சியில் ஒரு நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

திருச்சி மாநகராட்சியில் ஒரு நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட அரியமங்கலம் கோட்டம், வார்டு எண்.7,27க்குட்பட்ட திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் ரோட்டின்  (பிச்சை நகர் பகுதியில்) மேல்புரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான கொள்ளிடம் குடிநீர் திட்டத்தின் கீழ் பதிக்கப்பட்ட 500 எம்.எம் விட்டமுள்ள பம்பிங் மெயின் உள்ளது. இதன் மூலம் சஞ்சீவி நகர் விறகுபேட்டை, ஜெகநாதபுரம், மஹாலெட்சுமி நகர், சங்கிலியாண்டபுரம் மற்றும் கல்லுக்குழி ஆகிய 11 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் குடிநீர் நிரப்பப்பட்டு வருகிறது.

இப்பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதால், மாநகராட்சி மூலம் மேற்கண்ட பம்பிங் மெயின் குழாயினை சாலையோரம் மாற்றியமைக்கும் பணியானது 10.04.2021 மற்றும் 11.04.2021 ஆகிய நாட்களுக்கு மேற்கொள்ளப்படவுள்ளது.  

இதனால் மேற்படி மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கப்படும் பகுதிகளில் 11.04.2021 அன்று ஒருநாள் மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது. எனவே பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் திருச்சி மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr