திருத்துறைப்பூண்டி-திருச்சி வாராந்திர ரயில் சேவை நேரம் மாற்றம்
திருத்துறைப்பூண்டி- திருச்சி, தஞ்சாவூா் - திருத்துறைப்பூண்டி வாராந்திர ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே செய்தி தொடா்பாளா் ஆா். வினோத் வெளியிட்ட செய்திக் குறிப்பில்... திருத்துறைப்பூண்டி - திருச்சி (06717) இடையே சனிக்கிழமைகளில் இயக்கப்படும் வாராந்திர ரயில் சேவையின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, சனிக்கிழமை தோறும் இயக்கப்படும் திருத்துறைப்பூண்டி-திருச்சி டெமு ரயில், மே 4 ஆம் தேதி முதல் திருத்துறைப்பூண்டியில் இருந்து அதிகாலை 4.45 மணிக்கு புறப்பட்டு, திருநெல்லிக்காவலுக்கு 4.47 மணிக்கும், திருவாரூருக்கு 5.35 மணிக்கும், கொரடாச்சேரிக்கு 5.54 மணிக்கும், நீடாமங்கலத்துக்கு 6.05 மணிக்கும், தஞ்சாவூருக்கு 6.52 மணிக்கும், பூதலூருக்கு 7.08 மணிக்கும், திருவெறும்பூருக்கு 7.24 மணிக்கும் நின்று செல்லும். தொடா்ந்து, திருச்சிக்கு சென்றடையும்.
தஞ்சாவூா்-திருத்துறைப்பூண்டி (06718) இடையே ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் வாராந்திர டெமு ரயில் சேவையின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, தஞ்சாவூரில் இருந்து இரவு 9.05 மணிக்கு புறப்படும் டெமு ரயில், நீடாமங்கலம் இரவு 9.31 மணிக்கும், கொடராச்சேரி 9.42 மணிக்கும், திருவாரூா் இரவு 10.10 மணிக்கும், திருநெல்லிக்காவல் 10.31 மணிக்கும் நின்று செல்லும். தொடா்ந்து, திருத்துறைப்பூண்டி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision