குழந்தைகளை வைத்து யாசகம் பெற்றவர்கள் மீட்டு காப்பங்களில் ஒப்படைப்பு

குழந்தைகளை வைத்து யாசகம் பெற்றவர்கள் மீட்டு காப்பங்களில் ஒப்படைப்பு

திருச்சி மாநகர காவல் ஆணையர் N.காமினி, உத்தரவின்பேரில் திருச்சி மாநகரில் ஆதரவற்ற நிலையில் முக்கிய சந்திப்பு சிக்னல்கள் மற்றும் சாலையில் பிச்சை எடுத்து வருபவர்களை மீட்டு காப்பங்களில் ஒப்படைக்க திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், போக்குவரத்து உதவி ஆணையர் மற்றும் சரக உதவி ஆணையர்கள் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

அதன்படி, திருச்சி மாநகர குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு, குழந்தைகள் நலகுழுமம் ஆகியோரர் நடத்திய சோதனையில் இன்று (16.08.2023) திருச்சி ஸ்ரீரங்கம், அம்மா மண்டபம் பகுதிகளில் குழந்தைகளை வைத்து யாசகம் செய்து வந்த 1.பண்ணாரி (23), க/பெ.சங்கிலிமுருகன் (பொம்மை வியாபாரம்) என்பவர் 1 வயது பெண் குழந்தையுடனும்,

2.மகாலட்சுமி (22), க/பெ.மணிகண்டன் (பொம்மை வியாபாரம்) என்பவர் 1% வயது ஆண்குழந்தையுடனும், 3.அம்சவள்ளி, (25), க/பெ.பாண்டியன் (பொம்மை வியாபாரம்) என்பவர் 12 வயது ஆண்குழந்தையுடனும், 4. இந்திரா (27), க/பெ.வெங்கடேஷ் என்பவர் 3 வயது பெண் குழந்தையுடனும் மீட்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட நான்கு தாய் மற்றும் நான்கு குழந்தைகளும், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள "சொந்தம்" குழந்தைகள் காப்பகத்தில் நல்லமுறையில் ஒப்படைக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையின் பேரில் குழந்தைகள் நல குழும அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் இவர்கள் அனைவரும் திருச்சி மாவட்டம், நாகமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களது சொந்த குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்து வருவது உண்மையென தெரியவருகிறது.

திருச்சி மாநகரில் இதுபோன்று ஆதரவற்ற நிலையில் முக்கிய சந்திப்பு சிக்னல்கள் மற்றும் சாலையில் பிச்சை எடுத்து வருபவர்களை அவர்களின் மறுவாழ்விற்காக தொடர்ந்து மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, காப்பங்களில் ஒப்படைக்கப்படுவார்கள் என திருச்சி மாநகர காவல் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision