திருச்சியில் பூரி ஜகந்நாத் ரத யாத்திரை

திருச்சியில் பூரி ஜகந்நாத் ரத யாத்திரை

ஒடிசாவின் புனித நகரமான பூரியில் ஜகந்நாதரின் புகழ்பெற்ற ரத யாத்திரை விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த யாத்திரைக்காக ஜகந்நாதர், தேவி சுபத்ரா மற்றும் பலபத்ரா ஆகிய மூன்று ரதங்களும் இழுக்கப்பட்டு நேற்று ஸ்ரீமந்திராவின் சிங்க துவாராவின் முன் நிறுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து வழிபாடு செய்யும் இந்நிகழ்வானது 43 நாட்கள் நடைபெறும்.

பகவான் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் பகவான் ஜகந்நாதரின் வருடாந்திர பயணத்தை சித்தரிக்கும் ரத யாத்திரை பூரியில் தொடங்கும் அதே நாளில் திருச்சியில் முதன்முறையாக பூரி ஜெகநாதரின் ரத யாத்திரை இன்று மாலை தொடங்கியது.

திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகிலிருந்து தொடங்கிய இந்த ரதயாத்திரை தில்லைநகர் மக்கள்மன்றம் வரை சென்றடைந்தது. பாரம்பரிய தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டு இருந்த இந்த ரதத்தில் ஸ்ரீ கிருஷ்ணர், பலராமர் மற்றும் தேவி சுபத்ரா ஆகியோர் ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்க ரத யாத்திரை வெகு விமரிசையுடன் நடைபெற்றது. 

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பக்தி இயக்கத்தின் சார்பில் திருச்சியில் நடத்தப்படும் இந்த ரத யாத்திரையில் திருச்சி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

டெலிகிராம் மூலமும் அறிய.....
https://t.co/nepIqeLanO