23½ பவுன் தங்க நகைகள் இருந்த டிராவல் பேக்கை திருடிய மூன்று நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.

23½ பவுன் தங்க நகைகள் இருந்த டிராவல் பேக்கை திருடிய மூன்று நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.

கடந்த (19.02.2024)-ந் தேதி, பாலக்கரை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மணல்வாரித்துறை பொது கழிப்பிடம் அருகில் நடந்து சென்ற லோடுமேனிடம் கத்தியை காண்பித்து ரூ.10,800/- பணத்தை வழிப்பறி செய்ததாக பெறப்பட்ட. புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்தும், விசாரணை செய்யப்பட்டது.

இதில் சம்பவ ஈடுப்பட்ட தென்னூர் ஆழ்வார்தோப்பை சேர்ந்த 1.ஷேக் தாவுத் (எ) கோழி ஷேக் (38), த.பெ.பீர் முகமது, தென்னூர் புது மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 2.சூசைராஜ் (34), த.பெ.இன்னிசை, அரியமங்கலம் காமராஜ்நகரை சேர்ந்த 3.யாசர் அராபத் (28), த.பெ.சிக்கந்தர் பாஷா ஆகிய மூவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், விசாரணையில் கடந்த (17.02.2024)ந் தேதி தனியார் மாநகர பேருந்தில் 23½ பவுன் தங்க நகைகள் டிராவல் பேக்கில் வைத்துக்கொண்டு பயணிந்த மார்க்கெட்டிங் மேனேஜரிடமிருந்து பேக்கை திருடி வழக்கில் சம்மந்தப்பட்டிருப்பது. தெரிந்து, எதிரிகள் கைது செய்யப்பட்டு, 23½ பவுன் தங்க நகைகள் கைப்பற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது தெரிய வந்தது.

மேலும் எதிரி சூசைராஜ் மீது காந்திமார்க்கெட் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள வழக்குகள் உட்பட 9 வழக்குகளும், எதிரி ஷேக் தாவுத் மீது காந்திமார்க்கெட் காவல் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும், கோட்டை காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகள் உட்பட 22 வழக்குகளும், எதிரி யாசர் அராபத் மீது தில்லைநகர் காவல் நிலையத்தில் 4 திருட்டு வழக்குகள் உட்பட 15 வழக்குகளும் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

எனவே 1.சூசைராஜ், 2.ஷேக் தாவுத், 3.யாசர் அராபாத் ஆகிய மூன்று எதிரிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு பாலக்கரை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகளுக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்ற வழிப்பறி மற்றும் கொள்ளை குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision