விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வனச்சரகர் மற்றும் வனப்பாதுகாவலருக்கு மூன்று ஆண்டு சிறை
திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சடையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பன் மகன் வீரப்பன். இவர் விவசாயி. கடந்த 2005-ம் ஆண்டில் இவரது மாமா முத்து என்பவர் அவரது நிலத்திலிருந்த தேக்கு மரத்தினை வெட்டிய குற்றத்திற்கு அவர்மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், மூவாயிரம் லஞ்சம் கொடுத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிடுவதாக அப்போதைய மணப்பாறை வனச்சரகத்தில் பணிபுரிந்த வனச்சரகர் ஜானகிராமன் என்பவரும் வனப்பாதுகாவலர் ராமலிங்கம் என்பவரும் கூறியுள்ளனர்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத வீரப்பன் தனது மாமா முத்துவிடம் லஞ்சம் கேட்ட வனவர் ஜானகிராமன் மற்றும் வனப்பாதுகாவலர் ராமலிங்கம் மீது நடவடிக்கை எடுக்குமாறு அளித்த புகாரின்பேரில், அப்போதைய திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி சுரேஷ்குமார், ஆய்வாளர் பிரசன்ன வெங்கடேஷ் மற்றும் அவரது குழுவினர் ஆலோசனையின்பேரில், வனச்சரகர் ஜானகிராமன் மற்றும் வனப்பாதுகாவலர் ராமலிங்கத்திடம் வீரப்பன் மூவாயிரம் லஞ்சப்பணத்தை கொடுத்தபோது கையும் களவுமாக பிடிபட்டனர்.
மேற்படி ஜானகிராமன் மற்றும் ராமலிங்கம் மீதான லஞ்ச வழக்கு, திருச்சி லஞ்ச ஒழிப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து முடிவுற்று இன்று (28.03.2024) மேற்படி குற்றவாளிகள் மீதான குற்றம் உறுதிப்படுத்தப்பட்டது என்றும் குற்றவாளிகளுக்கு தலா 3 வருட சிறைதண்டனையும், தலா 20,000 ரூபாய் அபராதமும், அபராதம் சுட்டத்தவறினால் கூடுதலாக 6 மாத சிறைதண்டனையும் விதித்து சிறப்பு நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பளித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision