கால அட்டவணை - மற்ற பேருந்து நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படுமா??

கால அட்டவணை - மற்ற பேருந்து நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படுமா??

முதல்வரின் முகவரி துறையின் கோரிக்கையை ஏற்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பெட்டவாய்த்தலை மற்றும் குளித்தலை வரை செல்லும் நகரப் பேருந்துகளின் கால அட்டவணை தற்போது வைக்கப்பட்டது. பயணிகளின் வசதியை கருதி முதல்வரின் முகவரி துறைக்கு கோரிக்கை வைத்த, தொடர்ந்து இதற்காக பல மனுக்கள் அனுப்பி, தொடர்ந்து இயங்கிய ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி தங்கராஜ் அவர்களிடம் பேசினோம்,

சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து பெட்டவாய்த்தலை வழி தடத்தில் செல்லும் பேருந்துகளின் கால அட்டவணை இல்லாததால் நேரத்திற்கு பேருந்துகள் இல்லாமலும், இரவு நேரங்களில் நீண்ட நேரம் காத்திருந்து பின்பு பயணம் சில தனியார் பேருந்துகள் இந்த வழித்தடத்தில் இயங்காமல் இருந்தது. இதற்காக மக்களிடம் பேசியபோது கடந்த 7-8 வருடங்களாக பேருந்து கால அட்டவணை கிடைக்கவில்லை என்று கூறினார்கள்.

அதனை தெரிந்து கொள்வது முக்கியம் என்பதால் முதலில் போக்குவரத்து துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். அந்த துறையில் இருந்து இங்கு யாரை அணுக வேண்டும் என கூறினர். அதன்பின் கரூர் போக்குவரத்து கழகத்தை அணுகினோம். அங்கு இருக்கும் அலுவலர்கள் நன்றாக உதவி புரிந்தனர். தொடர்ந்து முதல்வரின் முகவரி துறையில் கோரிக்கை வைக்கப்பட்டது.

பின்னர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு திருச்சி மாநகராட்சிக்கு பேருந்து கால அட்டவணை வழங்கப்பட்டதுடன், சத்திரம் பேருந்து நிலையத்தில் வைக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். தற்போது பேருந்து நகர பேருந்து கால அட்டவணை வைக்கபட்டு, பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றபட்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

மேலும் இந்த வழித்தடத்தில் என்றில்லை, திருச்சி மாநகரில் இருக்கும் அனைத்து பேருந்து நிலையங்களிலும் இது போன்ற பேருந்து கால அட்டவணையை வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன் என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision