திருச்சியில் 50 முதல் 60 ரூபாய் வரை விற்பனையாகும் தக்காளி.

திருச்சியில் 50 முதல் 60 ரூபாய் வரை விற்பனையாகும் தக்காளி.

திருச்சி காந்தி மார்க்கெட் மொத்த வியாபாரத்தை பொருத்தவரை திருச்சி மட்டுமல்லாமல் அரியலூர், பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சார்ந்த பொதுமக்கள், சில்லறை வியாபாரிகள் காய்கறிகளை வாங்குவதற்காக வந்து செல்வார்கள்.

திருச்சி காந்தி மார்கெட் மொத்த வியாபார சந்தைக்கு சுமார் 600க்கும் மேற்பட்ட லாரிகளில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தக்காளி வெங்காயம் போன்றவை வரத்து இருக்கும். இந்நிலையில் திருச்சி காந்தி சந்தையில் தக்காளியின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக கிலோ 50ல் இருந்து 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக திருச்சி காந்தி மார்க்கெட் மொத்த வியாபார சந்தைக்கு வழக்கமாக லாரிகளில் வரும் தக்காளியின் வரத்து கடந்த இரண்டு நாட்களாக குறைந்ததன் காரணமாக இந்த விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக தக்காளி வியாபாரிகள் கூறினர்.

வரத்து குறைந்ததன் காரணமாக கடந்த வாரம் 30 மற்றும் 40 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி தற்போது 50 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision