சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாபாரிகளுக்கு எச்சரிக்கை
திருச்சி மாநகராட்சி 4-வது மண்டலத்துக்கு உட்பட்ட சாலைகளில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பொருட்கள், வாகனங்கள் நாளை (20.12.2024) (வெள்ளிக்கிழமை) காவல்துறை மற்றும் மாநகராட்சி மூலம் அகற்ற திருச்சி மாநகராட்சி ஆணையாளர் ஆணையாளர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ரொனால்ட்ஸ் ரோடு, ஒய்டபிள்யூ (YWCA) அருகில், ராயல் ரோடு, வில்லியம்ரோடு, வார்னஸ்ரோடு, ஸ்டேட் வங்கி சாலை, ஹீபர் சாலை, ராக்கின்ஸ் ரோடு மற்றும் பாரதியார் சாலை, ஜங்ஷன் பகுதிகளில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளன.
எனவே ஆக்கிரமிப்பாளர்கள் சாலையை ஆக்கிரமித்து வைத்துள்ள பொருட்களையும், நிரந்தரமாக ஆக்கிரமித்து நிறுத்தியுள்ள தள்ளுவண்டி கடைகள் உள்ளிட்ட வாகனங்களையும் அகற்றிக்கொள்ளும்படி ஒலிபெருக்கி மூலம் அப்பகுதி வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision