திருச்சியில் பாரம்பரிய சிறுதானிய உணவு திருவிழா

திருச்சியில் பாரம்பரிய சிறுதானிய உணவு திருவிழா

பாரம்பரிய உணவான சிறுதானியங்கள் குறித்து நுகர்வோர்களாகிய பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த (09.02.2024) அன்று காலை 9:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை 'சிறுதானிய உணவுத் திருவிழா" திருச்சிராப்பள்ளி மாநகரம் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கலையரங்கம் திருமண மஹாலில் நடைபெற உள்ளது.

உணவுத்திருவிழாவின் போது மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களால் சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான உணவுப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு அதன் பலன்கள் குறித்து விளக்கப்பட உள்ளது. தனியார் அமைப்புகள், பொது மக்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சிறுதானிய உணவுத் திருவிழாவில் விழிப்புணர்வு கண்காட்சி அரங்குகள் அமைக்க விரும்பினால் அல்லது சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவுகளை காட்சிப்படுத்தி பொது மக்களிடையே சிறுதானியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்பினால் dsotrichy2020@gmail என்ற மின்னஞ்சல் அல்லது 8903600075எண் வழியாக (07.02.2024) மாலை 05:00 மணிக்குள் தகவல் தெரிவித்து உரிய முன் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்.

சிறுதானிய உணவுத் திருவிழாவில் சிறப்பாக செயல்படும் மூன்று அரங்குகளுக்கு முதல், இரண்டு மற்றும் மூன்றாம் பரிசாக தலா ரூ.5,000/-, ரூ4,000/- மற்றும் ரூ3,000/- ரொக்கப்பரிசு மற்றும் நற்சான்றிதழ் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கப்படும். சிறுதானியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் மற்றும் அதன் பலன்களை விளக்கும், சிறுதானிய உணவுத்திருவிழாவில் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision