தமிழ் சித்த மருத்துவ நூல்கள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு - மத்திய இணை அமைச்சர் திருச்சியில் பேட்டி
ஆயுஷ் அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரம் அன்று சித்த மருத்துவத்தின் தந்தை, மாமுனிவர் அகத்தியரின் பிறந்தநாளை சித்தர் தினமாக அனுசரித்து வருகிறது. இந்த ஆண்டு (2023), "ஆரோக்கிய வாழ்விற்கு சித்த மருத்துவ உணவு மற்றும் ஊட்டச்சத்து முறைகள் என்ற தலைப்பில் 6வது சித்தர் தினக் கொண்டாட்டத்தை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம், தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் தமிழக அரசின் இந்திய மருத்துவம் & ஹோமியோபதி இயக்குநரகம் ஆகியவை இணைந்து இன்று திருச்சியில் நடைபெற்றது.
மத்திய இணை அமைச்சர் முஞ்சாபரா மகேந்திர கலுபாய், ஆயுஷ் மற்றும் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மற்றும் மக்களவை உறுப்பினர் திருச்சிராப்பள்ளி திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு ஆயுஷ் அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் பிரமோத் குமார் பதக் தலைமை தாங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முஞ்சபாரா மகேந்திரபாய் .... ஆங்கில மருத்துவத்திற்கு இணையாக இந்திய சித்த மருத்துவ முறைகள் மக்களிடையே வேகமாக பரவி வருகிறது. சித்த மருத்துவ பலன்களை இந்திய மக்கள் உணர தொடங்கியுள்ளனர்.
சித்த மருத்துவ முறைகளை மேம்படுத்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ் சித்த மருத்துவ நூல்கள், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பது குறித்து கோரிக்கை பிரதமர் மோடியின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும். மேலும் மத்திய அரசின் சார்பில் தமிழகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn