சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த பயணிக்கு ஒமிக்ரான் தொற்று உள்ளதா என பரிசோதனை - ஆட்சியர் தகவல்

சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த பயணிக்கு ஒமிக்ரான் தொற்று உள்ளதா என பரிசோதனை - ஆட்சியர் தகவல்

நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் விமானத்தில் திருச்சி வந்த 141 பயணிகளிடம் கோவிட் புதிய வகை வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் தஞ்சையை சேர்ந்த ஆண் ஒருவருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

ஒமைக்ரான் தொற்று உள்ளதா என்பது குறித்து ஆய்வுக்கூடத்திற்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். முடிவுகள் வந்த பிறகே ஒமைக்ரான் தொற்று உள்ளதா இல்லையா என்பது தெரியவரும் என  தகவல் தெரிவித்துள்ளார்.

இவர் தற்போது திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுவரை சிங்கப்பூரிலிருந்த வந்த 1200 க்கும் மேற்பட்டவர்ககளிடம் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ 

டெலிகிராம் மூலமும் அறிய... https://t.me/trichyvisionn