முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய திருச்சி மாநகர காவல் ஆணையர்
திருச்சி மாநகரத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்களில் நடைபெறாத வண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வாகன தணிக்கை செய்து சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளவும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன்.
திருச்சி மாநகரம் எடமலைப்பட்டிபுதூர் காவல்நிலையத்தை இன்று ஆய்வு செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் காவல் நிலைய கோப்புகளை ஆய்வு செய்தும், காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட வேண்டிய கோப்புகளை பற்றிய தக்க அறிவுரை வழங்கியும், நிலுவையில் உள்ள வழக்குகளில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள தக்க அறிவுரை வழங்கியுள்ளார்.
பின்னர் காவல் நிலையத்தை சுற்றி பார்வையிட்டும் கொரோனா காலங்களில் காவல் நிலையத்தை சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆக வைத்துக்கொள்ள காவல் ஆய்வாளர்களுக்கு தக்க அறிவுரை வழங்கினார். மேலும் காவலர்கள் தங்களையும், தங்களது குடும்பத்தினரையும் தற்காத்துக் கொள்ளவும் முக கவசம் அணிந்து பணியாற்றுமாறு அறிவுரை வழங்கினார்.
மேலும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு சம்பந்தமாக காவல் ஆய்வாளர்கள் காவலாளிகள் மற்றும் ரோந்து காவலர்கள் பொதுமக்களிடையே கொரானா சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்திட அறிவுரை வழங்கிய பின்னர் எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையம் அருகிலேயே கொரானா பரவலை தடுக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கிஅதன் முக்கியத்துவத்தை பற்றி அறிவுரை வழங்கி சென்றார். திருச்சி மாநகரில் முனைப்புடன் கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc
#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn