திருச்சியில் பட்டமளிப்பு விழா - பிரதமர் மோடி பங்கேற்பு - பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

திருச்சியில் பட்டமளிப்பு விழா - பிரதமர் மோடி பங்கேற்பு - பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

திருச்சி திருவெறும்பூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக 2.81 லட்சம் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படாமல் இருந்து

வரும் ஜனவரி 2ஆம் தேதி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 38வது பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். விழா நடைபெறும் பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில், திருச்சி மாவட்ட ஆட்சியர்பிரதீப் குமார், மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், DiG பகலவன், SP வருண் குமார் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு. உடன் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம், தேர்வு நெறியாளர் சீனிவாசராகவன் ஆகியோர் உடன் உள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த 2.81 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மோடி பட்டங்களை வழங்க உள்ளார் என்பது குறி ப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision