வடகிழக்கு பருவமழைக்கு தயாராகும் திருச்சி மாநகராட்சி!!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்க உள்ள நிலையில், திருச்சி மாநகராட்சியில் கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஆராய்ந்து அதிகளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடங்களில் உள்ள வடிகால்களை தூய்மைபடுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
ரெட்டைவாய்க்கால் வாய்க்கால், சிம்கோ மீட்டர் ரோடு போன்ற முக்கியமான வாய்கால் உள்ளிட்ட 21 பெரிய வாய்க்கால்களுடன், 132 கிமீ நீள அளவிற்கான பெரிய வடிகால்கள் மற்றும் 125 கீமி நீளத்திற்கான கால்வாய்களும் தூர்வாரபட்டு சுத்தம் செய்யப்பட உள்ளது.
ஏற்கனவே 20 சதவிகித பணிகள் நிறைவடைந்ததுள்ள நிலையில், மீதமுள்ள பணிகள் அக்டோபர் முதல் மற்றும் இரண்டாம் வாரங்களில் முடிக்கப்பட உள்ளது. இதற்காக 4.1 கோடியை மாநகராட்சி ஒதுக்கியுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision