திருச்சி திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி கெட்டுப்போச்சு - அபாரதம்

திருச்சி திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி கெட்டுப்போச்சு - அபாரதம்

திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் ஆண்ட்ரூ. இன்று மதியம் கரூர் பைபாஸ் சாலையிலுள்ள கலைஞர் அறிவாலயம் அருகே உள்ள திண்டுக்கல் தலப்பாகட்டி கடையில் சுகி மூலம் மதிய உணவு ஆர்டர் செய்துள்ளார். சிக்கன் 65 பிரியாணி அவர் தனக்கு உணவாக ஆர்டர் செய்துள்ளார்.

அவர் மதியம் சாப்பிட எடுத்து பார்த்த பொழுது உணவு கெட்டு போய் இருந்தது. உடனடியாக தலப்பாகட்டி கடைக்கு தொலைபேசியில் பேசி கேட்டபொழுது அவர்களது உணவு சமைக்கும் ஊழியரிடம் கேட்டு சொல்வதாக குறிப்பிட்டனர். பிறகு ஒரு மணி நேரம் ஆகியும் எந்த பதிலும் வராதால் நேரடியாக கெட்டுப்போன உணவை எடுத்துக்கொண்டு ஆண்ட்ரூ திண்டுக்கல் தலப்பாக்கட்டி கடைக்கு நேரில் சென்ற பொழுது சூடான உணவு பேக் செய்ததால் கெட்டுவிட்டது என்று பதில் அளித்துள்ளனர்.

அந்த பதிலை ஏற்றுக் கொள்ளாத அவர் நேரடியாக உணவு மற்றும் மருந்து பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகாரை தொலைபேசியில் கொடுத்தார். உடனடியாக வந்து அவர்கள் சோதனை செய்த பொழுது திண்டுக்கல் தலப்பாகட்டி கடையில் கெட்டுப்போன 3 கிலோ அசைவ உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு 3000 ரூபாய் அபராதம் விதித்து நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

இதற்காக ஒரு வீடியோ காட்சியை பதிவு செய்து அசைவ உணவுகளை வெளியில் வாங்கி சாப்பிடும் பொழுது உடனடியாக அதனை சோதித்து சாப்பிட வேண்டும்.பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மேலும் கெட்டுப் போன உணவை தொடர்பாக அந்த நிறுவனத்திடமும் கேட்டு அது தொடர்பாக உணவு மருந்து பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கும் புகாரை தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision