திருச்சி காந்தி சந்தை நாளை மதியம் முதல் மூடல் மாநகராட்சி நடவடிக்கை 

திருச்சி காந்தி சந்தை நாளை மதியம் முதல் மூடல் மாநகராட்சி நடவடிக்கை 

திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி, பழக்கடை, இறைச்சி என மொத்தம் மற்றும்  சில்லரை வியாபாரம் என 1500க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக காந்தி மார்க்கெட் மூடப்பட்டு மதுரை மைதானம் மற்றும் ஜி கார்னர் மைதானத்தில் செயல்பட்டது. இதனைத் தொடர்ந்து கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின் மீண்டும் காந்தி மார்க்கெட் செயல்பட தொடங்கியது.

இதனையடுத்து கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர் அதில் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் முறையாக முகக் கவசம், தனிமனித இடைவெளியை பின்பற்றவில்லை. இங்குள்ள அனைத்து கடைகளும் இன்று மதியம் 12 மணிக்கு மூடப்பட்டன. இன்று இரவு 10 மணிக்கு காய்கறிகள் விற்பனைக்கான மொத்த வியாபார கடைகள் திறக்கப்படுகின்றன.

அதேபோல நாளை காலை சில்லரை விற்பனை கடைகள் திறக்கப்படுகிறது. நாளை மதியம் 12 மணி முதல் காந்தி சந்தையில் உள்ள அனைத்து கடைகளும் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது. இக்கடைகள் அனைத்தும் திருச்சி பொன்மலை இரயில் பணிமனைக்கு சொந்தமான ஜி கார்னர் மைதானத்திற்கு மாற்றப்படுகிறது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் கொரோன தொற்று பாதிப்பு குறித்து சுமார் 5 லட்சம் பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 26 ஆயிரத்து 156 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 22 ஆயிரத்து 335 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இதுவரை 235 பேர் பலியாகியுள்ளனர். தற்போது திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 3 ஆயிரத்து 419 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 3,200 பேரும், சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் 652 பேருக்கு கொரோன தொற்று பாதிப்பு இருப்பது கண்டறிப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/GJDm40VrfQc6PgMBZJzYBf