திருச்சி அரசு பள்ளியில் மாணவர்கள் அசத்திய அறிவியல் படைப்புகள்

திருச்சி அரசு பள்ளியில் மாணவர்கள் அசத்திய அறிவியல் படைப்புகள்

த.பாதர் பேட்டை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினம் முன்னிட்டு அறிவியல் கண்காட்சி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் திரு. இருதயராஜ் தேவகுமாரன் அவர்கள் இக்கண்காட்சியில் பங்கு பெற்றுள்ள அனைவரையும் வாழ்த்தினார்.

முதல் நிகழ்வாக அறிவியல் அறிஞர் சர்.சி.வி.இராமன் அவர்களின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திருமதி ம. தனலட்சுமி அவர்கள் தேசிய அறிவியல் தினத்தின் நோக்கம் ,சர்.சி.வி.இராமன் ஐயா அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் இராமன் விளைவு குறித்து எடுத்துரைத்தார்.

மாணவர்கள் அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர். ராக்கெட், தீயணைப்பான், வகுப்பறையில் வானவில் ,அடர்த்தி, காற்றழுத்தம், மழைநீர் சேகரிப்பு மற்றும் அறிவியல் மேஜிக் போன்ற படைப்புகளை காட்சிப்படுத்தி விளக்கினார்கள். பள்ளியில் வைக்கப்பட்ட விண்வெளி வீரர் பதாகைகளில் மாணவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டது மிகவும் சிறப்பு.

இந்நிகழ்வில் ஆசிரியர்கள் சுப்ரமணியன் ,சாந்தி, சுதாகர் ,சுப்ரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களின் படைப்புகளை ஊக்கப்படுத்தினார்கள். பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சியானது மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

 திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய 

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய

 https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision