திருச்சி-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் வருகின்ற 30-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டது

திருச்சி-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் வருகின்ற 30-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டது

தெற்கு ரயில்வே: திருச்சி-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் (16234) வருகிற 30-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக திருச்சி-மயிலாடுதுறை இடையே முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் 30-ந் தேதி வரையிலும் இயக்கப்படுகிறது. திருச்சியில் இருந்து மதியம் 12.50 மணிக்கு புறப்படும் ரெயில் மயிலாடுதுறைக்கு மாலை 4.15 மணிக்கு சென்றடையும்.இந்த தகவலை திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.எனவே பயணிகள் தங்கள் பயணங்களை திட்டமிட்டு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்