திருச்சி தேசிய கல்லூரி 104ஆம் ஆண்டு கல்லூரி நாள் விழா

திருச்சி தேசிய கல்லூரி 104ஆம் ஆண்டு கல்லூரி நாள் விழா

 திருச்சியில் 1919 ஆம் ஆண்டு தொடங்கப் பெற்று104 ஆண்டுகளை தொடர்ந்து கல்வி சேவை புரிந்து வரும் நிறுவனமாக தேசிய கல்லூரி விளங்குகிறது.

 கல்லூரியின் 104 வது ஆண்டு கல்லூரி விழா இன்று நடைபெற்றது. கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர் டாக்டர் என் எஸ் பிரசாத் தேசிய கல்லூரியின் தோற்ற பின்னணியையும் நோக்கங்களையும் எடுத்து கூறி வரவேற்பு உரை ஆற்றி சிறப்பு விருந்தினர்களை கௌரவப்படுத்தினார்.

 2022-23 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் கல்வி ஆராய்ச்சி கலை விளையாட்டு சமூக பங்களிப்பு உள்ளிட்டு பிரிவுகளில் தேசியக் கல்லூரி மாணவர்களும் பேராசிரியர்களும் நிகழ்த்திய சாதனை பட்டியலை கல்லூரி முதல்வர் முனைவர் குமார் ஆண்டறிக்கை  வாசித்தார்.

கல்லூரி செயலர் ரகுநாதன் விழாவிற்கு முன்னிலை வகித்தார். புதுச்சேரி ஆச்சாரியா குழும கல்வி நிறுவனங்கள் மற்றும் வாவ் அகாடமி நிறுவனர் அரவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரது உரையில் இந்த தேசிய கல்லூரி வரலாற்று பாரம்பரிய மிக்கது என்றும் ஆங்கிலேயர் காலத்திலேயே நாட்டுப் பற்றுடன் தொடங்கப்பட்ட கல்லூரியில் பயின்றோர் குடியரசு தலைவர் ரிசர்வ் வங்கி ஆளுநர் முதல் பற்பல உயர் பதவிகளின் மக்கள் தொண்டு ஆற்றி உள்ளதை நினைவு கூர்ந்தார்.

இன்றும்   கல்லூரி பல்வேறு துறைகளில் சீரிய பணிகளை சிறப்பாக செய்து வருவது குறித்தும், பெருமிதமாக தெரிவித்தார். மேலும் கல்லூரியில  வெறுமனே படிப்பவர்கள் வெற்றி பெறுவதில்லை கற்றுக் கொள்பவர்கள்  சாதனையாளர்களாக மாறுகிறார்கள் எனக்கூறினார்.

 சிறப்புரையை தொடர்ந்து பரிசளிப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது நல்ல மதிப்பெண்கள் வாங்கி பல்கலைக்கழக அளவில் தர வரிசை சிறப்பிடம் பெற்ற 30 மாணவர்கள் பல்வேறு திறன் சார்பு பிரிவுகளின் கீழ் 250 மாணவர்கள் கல்லூரியில் நிறுவ பெற்றுள்ள அறக்கட்டளைகளின் சார்பாக 90 மாணவர்கள் கல்வி ஆண்டில் பணி நிறைவு பெறுகின்ற எட்டு பேராசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த நான்கு பேரும்,நூறு விழுக்காடு வருகை பதிவு பெற்ற ஒரு பேராசிரியர் உட்பட சுமார் 400 பேர் பதக்கங்களையும் பாராட்டு சான்றிதழ்களையும் ரொக்க பரிசுகளையும் நூல் பரிசுகளையும், கேடயங்களையும் பெற்றனர்.

 பரிசு பட்டியலை ஆங்கிலத் துறை உதவி பேராசிரியர் முனைவர் ஸ்ரீ ராமச்சந்திரன் வாசித்தார் நிறைவாக கல்லூரியின் துணை முதல்வர் இளவரசு நன்றி கூறினார் தமிழ் துறை உதவி பேராசிரியர் முனைவர்  நீலகண்டன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். துணை முதல்வர் தேர்வு நெறியாளர்கள்,  துறை தலைவர்கள் பேராசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn