ஆபாசமாக போட்டோ எடுத்து மிரட்டல் - மலேசியாவில் இருந்து வந்த வாலிபரை கைது செய்த திருச்சி எஸ்.பி தனிப்படைப் போலீசார்

ஆபாசமாக போட்டோ எடுத்து மிரட்டல் - மலேசியாவில் இருந்து  வந்த வாலிபரை கைது செய்த திருச்சி எஸ்.பி தனிப்படைப் போலீசார்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் வசித்து வரும் பாதிக்கப்பட்ட 25 வயது மதிக்கத்தக்க பெண் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் வங்யில் வேலை பார்த்து வந்தார். அப்போது, சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் கடலூர் கோட்டு முல்லை காந்தி தெருவை சேர்ந்தவர் தினேஷ் (31) என்பவருடன் நட்பு ரீதியாக பழகி வந்துள்ளார்.

பின்னர் மேற்படி தினேஷ் பாதிக்கப்பட்ட பெண்ணை, கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி காரில் வேலூரில் உள்ள ஒரு தனியார் உணவகத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண்ணை ஆபாசமாக போட்டோ எடுத்து வைத்திருப்பது அந்த பெண்ணுக்கு தெரியவந்தது.

இதனால் தினேஷை கண்டித்ததோடு அவருடன் பேசுவதை தவிர்த்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தினேஷ், மேற்படி பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தன்னிடம் பேச வற்புறுத்தியும், பேசவில்லையென்றால் தன்னிடம் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விடுவதாகவும், ஆபாசமாக திட்டியும் கொலை மிரட்டல் விடுததுள்ளார், 

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரின் செல்போனில் தொடர்பு கொண்ட தினேஷ், உனது மகளை என்னிடம் அனுப்பி வை, நான் உல்லாசமாக இருந்துவிட்டு திருப்பி அனுப்பி வைக்கிறேன் இல்லாவிட்டால் உனது மகளை கொலை செய்து விடுவேன் என்றும் தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திருமணத்தையும் நிறுத்தி விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்ததுள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கடந்த 5ஆம் தேதி திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்

அதன் அடிப்படையில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த போது தினேஷ் மலேசியா சென்று இருப்பது தெரியவரவே, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், உத்தரவின் பேரில், மேற்படி எதிரி தினேஷிற்கு லுக்அவுட் நோட்டிஸ் கொடுக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி அதிகாலை 12:30 மணியளவில் மேற்படி எதிரியான தினேஷ் என்பவர் மலேசியாவில் இருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் கொச்சின் பன்னாட்டு விமான நிலையத்தில் இறங்கியபோது, கொச்சின் விமான நிலைய இம்மிகிரேசன் அதிகாரிகள் திருச்சி மாவட்ட போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில், தனிப்படையினர் மூலம் தினேஷை கைது செய்து, திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்யப்பட்டு தினேஷை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision