கேரளாவில் கூடைப்பந்து விளையாடிய திருச்சி எஸ்எஸ்ஐ மரணம்
திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் ராஜ்மோகன் (49). கூடைப்பந்து வீரரான இவர் 1997ல் பயிற்சி முடித்து திருச்சி மாநகரம் மற்றும் மாவட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த இவர் கடந்த ஜூலை மாதம் திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியில் சேர்ந்தார்.
இந்நிலையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் கூடைப்பந்து போட்டியில் பங்கேற்க அவர் 6 நாட்கள் தற்செயல் விடுப்பு எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து இன்று மதியம் அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மைதானத்தில் கூடைப்பந்து விளையாடி கொண்டிருந்த போது அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
இதனை தொடர்ந்து சக கூடைபந்து வீரர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் உடற்கூறு ஆய்விற்காக கேரளா பாளையம் மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.
சிறந்த கூடைப்பந்து வீரரான சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராஜ்மோகன் விளையாட்டின் போது உயிரிழந்த சம்பவம் கூடைப்பந்து வீரர்கள் மற்றும் காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision